காளையின் ஆதிகத்தால் சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தை!
ஓய்வுக்குப் பின் ஸ்டாண்ட்-அப் காமெடியில் ரோஹித் சர்மாவுக்கு நல்ல எதிர்காலம்: முன்னாள் ஆஸி. வீரர்!
ஓய்வுக்குப்பின் ஸ்டாண்ட்-அப் காமெடியில் ரோஹித் சர்மாவுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் சைமன் கேட்டிச் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைத் தழுவி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பார்டர்- கவாஸ்கர் தொடரையும் இழந்தது.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான பேட்டிங்கே அணியின் தோல்விக்கு முழுமையான காரணம் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
ரோஹித் சர்மா, விராட் கோலியை குறிவைப்பது நியாயமல்ல; யுவராஜ் சிங் ஆதரவு!
இதுபற்றி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் சைமன் கேட்டிச் கூறுகையில், “நல்லது! ரோஹித் சர்மா, அவரின் ரன்களை மட்டும் பார்த்துக்கொண்டு போட்டியின் பாதியில் இருந்து விலகியது தன்னலமற்றது. ரோஹித் சர்மாவின் பேட்டியைப் பார்த்தேன். அவர் நகைச்சுவையாக நன்றாகப் பேசினார்.
ரோஹித் சர்மாவிற்கு ஓய்வுக்குப்பின் ஸ்டாண்ட்-அப் காமெடியில் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தியாவுக்கு அடுத்த தொடர் இங்கிலாந்துடன் நடைபெறவிருக்கிறது.
இந்தியாவின் தற்காப்பு மனநிலைதான் தோல்விக்கு காரணம்..! முன்னாள் வீரர் கருத்து!
இது இந்தியாவுக்கு மட்டுமின்றி, ரோஹித்துக்கும் கடுமையான சவாலாக இருக்கும். மீண்டும் விளையாடுவது குறித்து அவர் தான் முடிவெடுக்க வேண்டும். எவ்வாறாயினும் தொடர் எளிமையாக இருக்காது. இங்கிலாந்து அணி வேகமாக முன்னேறியிருக்கிறது. அந்த அணியில் கஸ் அகிட்சன் மற்றும் பிரைடன் கார்ஸ் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்” என்றார்.
இங்கிலாந்தில் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 40.30 சராசரியுடன் 524 ரன்கள் குவித்துள்ளார். அதில், ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடங்கும்.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு முன்னதாக, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடவிருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்குகிறது.