சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இன்ஸ்பெக்டர், அதிமுக பிரமுகர் சிக்கிய ப...
நிதீஷ் ரெட்டியால் குழம்பிய இந்திய தேர்வுக்குழு!
நிதீஷ் ரெட்டியின் எதிர்பாராத சிறப்பான பேட்டிங் அணித் தேர்வுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
நிதீஷ் ரெட்டி இந்தத் தொடரில் 298 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 37.25ஆக இருந்தது. மெல்போர்னில் சதமடித்து அசத்தினார். பெர்த்தில் 41, 38 ரன்களும் எடுத்தார்.
21 வயதாகும் நிதீஷ் ரெட்டி 5 விக்கெட்டுகள் எடுத்தும் அசத்தினார்.
நிதீஷ் ரெட்டியின் இந்த சிறப்பான ஆட்டம் அணித் தேர்வர்கள் மத்தியில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியதென முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார்.
பலரும் பாராட்டிய நிதீஷ் குமாரின் தேர்வை குறித்து வித்தியாசமான கருத்து தெரிவித்துள்ளார் சஞ்சய் பாங்கர். அவர் கூறியதாவது:
நிதீஷின் எதிர்பாராத ஆட்டம் இந்திய அணியை தடுமாற்றத்தில் தள்ளியது. நிதீஷ், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா இவர்களை வைத்து இந்திய அணிக்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது.
ஆஸி. பிட்ச்களில் தேவைக்கு ஏற்றபடி உடனடியாக மாற்றம் செய்திருக்க வேண்டும். முன்னதாகவே சரியாக முடிவெடுத்திருந்தால் இந்திய அணிக்கு நல்ல காம்பினேஷன் அமைந்திருக்கும் என்றார்.