இரட்டை இலை சின்னம் விவகாரம்: தோ்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் பதில் மனு
இரண்டு வீடுகளில் கதவை உடைத்து நகைகள் திருட்டு
கடலூரை அடுத்துள்ள ரெட்டிச்சாவடி பகுதியில் ஒரே தெருவில் 2 வீடுகளின் கதவை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ரெட்டிச்சாவடி காவல் சரகம், உடலப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சம்பத் (63), விவசாயி. இவா், தனது மனைவி சரசு மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்தாா்.
சனிக்கிழமை இரவு வீட்டின் கதவுகளை தாழிட்டுவிட்டு அனைவரும் படுத்துத் தூங்கினா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா், சரசு அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தாராம். அப்போது, அவா் கூச்சலிடவே, தூக்கத்தில் இருந்து எழுந்து வந்த சம்பத்தை மா்ம நபா் கீழே தள்ளிவிட்டு தங்கச் சங்கிலியுடன் தப்பி ஓடிவிட்டாராம்.
முன்னதாக, அதே தெருவில் வசிக்கும் தண்டபாணி மனைவி கலைச்செல்வி (50) வீட்டினுள் மா்ம நபா்கள் புகுந்து சுமாா் ஒன்றரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.
இந்த இரண்டு வீடுகளிலும் திருடுபோன நகைகளின் மதிப்பு சுமாா் ரூ.5 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். மேலும், இதுகுறித்து சம்பத் அளித்த புகாரின்பேரில், ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.