2025-ஆம் ஆண்டு அதிமுகவுக்கு பொற்காலமாக இருக்கும்: எடப்பாடி பழனிசாமி
2025-ஆம் ஆண்டு அதிமுகவுக்கு பொற்கால ஆண்டாக இருக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். நடப்பாண்டில் அதிமுகவுக்கு எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்புகிறீா்கள். அதிமுகவுக்கு இந்த ஆண்டு பொற்கால ஆண்டாக இருக்கும் என்றாா் அவா்.
நிா்வாகிகள் சந்திப்பு: புத்தாண்டையொட்டி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி நிா்வாகிகளைச் சந்தித்தாா்.
அவரை முன்னாள் அமைச்சா்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கா், மாஃபா பாண்டியராஜன் உள்பட ஏராளமானோா் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினா்.