Book Fair: "வரலாற்றை எழுத வரலாறு முக்கியம்.." - ஆ.இரா. வேங்கடாசலபதியின் பரிந்துர...
அடகு வைக்க செல்லும்போது காணமல் போன கம்மல்... சாதுர்யமாக மீட்டு கொடுத்த ஊராட்சி துணை தலைவர்!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள சேரம்பாடி, பாலவாடி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. தான் அணிந்திருந்த தங்க காதணிகளை குடும்ப சூழ்நிலை காரணமாக அடகு வைப்பதாற்காக சேரம்பாடி கடைவீதிக்கு கொண்டு சென்றிருக்கிறார். சேரங்கோடு ஊராட்சி பகுதிகளில் முறையான குடிநீர் விநியோகம் இல்லாத காரணத்தால் ஊராட்சி அலுவலகத்தில் சுற்றுவட்டார மக்கள் முறையிட சென்றுள்ளனர். மல்லிகாவையும் அழைத்துள்ளனர்.
தங்க நகையை பத்திரமாக வைத்திருக்குமாறு மகன் கையில் கொடுத்துவிட்டு குடிநீர் பிரச்னைக்கு மக்களோடு சேர்ந்து குரல் கொடுக்கச் சென்றிருக்கிறார். திரும்பி வந்து பார்த்தபோது மகன் கையில் நகை இல்லை. அடகு வைக்க கொண்டு வந்த தங்க நகை தொலைந்தால் தாயும் மகனும் சேரம்பாடி கடை வீதியில் கதறி அழுதிருக்கிறார்கள். பல மணி நேரமாக தேடி கிடைக்காமல் சோர்ந்திருக்கிறார்கள்.
இதைக் கேள்விபட்டு நிகழ்விடத்திற்கு வந்த சேரம்பாடி ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரபோஸ். 'கம்மலை எடுத்து வைத்திருப்பவரது வீடியோ சி.சி.டி.வியில் பதிவாகியிருக்கிறது. காவல்துறையில் புகார் அளிப்பதற்குள் ஊராட்சி அலுவலகத்தில் வந்து ரகசியமாக கொடுத்து விடுங்கள்' என இவராகவே அறிவிப்பை விடுத்திருக்கிறார். இதைக் கேட்டு பதறிய நபர் ஒருவர் 'தன்னை மன்னித்து விடுங்கள். அடையாளத்தை வெளியில் சொல்லாதீர்கள்' என சந்திரபோஸிடம் நகையை ரகசியமாக கொடுத்திருக்கிறார்.
அந்த நபரை கடுமையாக எச்சரித்து அனுப்பிய சந்திரபோஸ், மல்லிகா கையில் நகையை பத்திரமாக ஒப்படைத்தார். ஆனால், உண்மையில் சி.சி.டி.வி யில் எதுவும் பதிவாகவில்லை. அவராகவே சாதுர்யமாக யோசித்து நகையை மீட்டு கொடுத்ததை அறிந்து மக்கள் பாராட்டி வருகின்றனர்.