செய்திகள் :

Tsunami 20 : 'எங்கும் பிணக் குவியல்; மனதை மரத்துப்போக வைத்துத்தான்...' - ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

post image

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி வழக்கமான ஒரு ஞாயிறு தினமாகவே இருந்திருக்கும், அந்த ஒரு சம்பவம் மட்டும் நடக்காமலிருந்திருந்தால். ஆனால், சுமத்திரா தீவில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் அங்கு மட்டுமல்ல மொத்தம் 14 நாடுகளை ஆட்டம் காண வைத்தது. நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி என்று சொல்லப்படும் ஆழிப்பேரலை மொத்தம் 2.30 லட்சம் மக்களின் உயிரை விழுங்கி சென்றது.

கோடிக் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைத் துடைத்துக் கடலோடு கடலாக எடுத்துச் சென்றது. ஒருநாளில் உறவினர்களை, வாழ்வாதாரங்களை என மொத்தத்தையும் இழந்து நிர்க்கதியாக மக்கள் நின்றார்கள். இந்த கோரா சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது.

ராதாகிருஷ்ணன் IAS / சுனாமி பாதிப்பு 2004

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி ஒருங்கிணைந்த நாகை மாவட்டம்தான். மொத்த இறப்புகளில் நாகை மாவட்டத்தில் மட்டும் 6000 மேல் இறப்புகள் பதிவாகியது. அந்த நேரத்தில் நாகை பகுதியில் மீட்புப் பணியில் முன்வரிசையில் பல அரசு அதிகாரிகள் பணியாற்றியிருந்தாலும், அதில் ராதாகிருஷ்ணன் அவர்களின் பணி அனைத்து தரப்பினராலும் பெரிதாகப் பாராட்டப்பட்டது. அன்று களத்தில் அவர் கண்ட நிகழ்வுகள் குறித்து அவரிடம் பேசினோம்....

"சுனாமி வந்ததென்று தங்களுக்கு எப்போது தகவல் வந்தது..?"

"அந்த சமயத்தில் நான் தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்தேன். நாகையில் பெரும் பாதிப்பு என்று எனக்குக் காலை 9.30 மணியளவில் தகவல் வந்தது. என்னை நாகைக்குச் செல்லச் சொல்லியிருந்தார்கள். நான் அங்குப் போகும்போது மதியம் ஆகிவிட்டது. செல்லும் வழியெல்லாம் பார்க்கும்போதே ஒரு பெரும் அசம்பாவிதம் நடந்தது புரிந்தது. நாகை மருத்துவமனைக்குச் சென்று பார்க்கும்போது சுமார் 900 சடலங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த காட்சி இன்னும் என் மனதை விட்டு அகலவே இல்லை. மக்கள் ஊரை விட்டு வெளியே வரும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது. நாகை மாவட்ட ஆட்சியர் அன்று வெளியே சென்றிருந்ததால் என்னை நாகையில் இருக்கும்படி தலைமைச் செயலாளர் சொல்லியிருந்தார்."

சுனாமியில் உயிரிழந்தவர்கள்

"பாதிப்புகளும், உயிரிழப்புகளும் எந்த அளவுக்கு இருந்தன?"

"நகையைச் சுற்றிப் பல கிராமங்களுக்கு முற்றிலுமாக இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. பாலங்கள் உடைந்திருந்தது. சாலைகளைக் காணவில்லை, வீடுகள் துடைத்தெறியப்பட்டிருந்தன. விளைநிலங்களில் கடல் மண் நிரம்பியிருந்தன. மொத்த பகுதியும் உருக்குலைந்திருந்தது. அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், கிச்சன்குப்பம், திடீர் குப்பம் போன்ற பகுதிகளில் பாதிப்புகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருந்தன. கடல்நீர் 500 மீட்டரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் வரை உள்ளே வந்திருந்தது. ஒரு கிராமம் முழுக்க சடலங்கள் இருந்தால் அந்த நிலைமையை என்னவென்று சொல்வது?"

"அத்தனை ஆயிரம் சடலங்களைப் பார்த்து நொடி உங்களுக்கு எப்படியிருந்தது?"

"என் வாழ்வில் மிகக் கடினமான நேரமாக அது இருந்தது. மனதை முழுவதும் மரத்துப்போக வைத்துப் பணியைத் தொடர்ந்தோம். தமிழகத்தில் நாகையில் மட்டும் 6,065 உயிரிழப்புகள். 18,000 வீடுகள் மொத்தமாகத் தரைமட்டமாகியிருந்தது. அப்படியென்றால் இந்த பகுதியில் பாதிப்புகளின் அளவை நீங்களே நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள். தெரு முழுவதும் சடலங்கள், சாலை முழுவதும் சடலங்கள். சடலங்களை அடையாளம் கண்டறிந்து பின் லாரி, டிராக்டரில் ஏற்றிக்கொண்டு சென்று பெரிய பள்ளம் வெட்டி மொத்தமாக அடக்கம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது."

2004 சுனாமி பாதிப்பு நாகை

"அரசு எந்தளவுக்கு பணியை முடக்கி விட்டிருந்தது?"

"அன்றைய முதல்வர் எங்களுக்கு முழு சுதந்திரம் அளித்திருந்தார். ஒரே மாவட்டத்தில் 11 அதிகாரிகள் தலைமையில் ஒரு மினி ஆட்சியர் அலுவலகமே அமைக்கப்பட்டிருந்தது. எங்களுக்கு நிதி சுதந்திரமும் அளிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மீட்புப் பணிகளுக்கும் தேவையான அனைத்துமே உடனடியாக செய்யப்பட்டிருந்தன. பாதிப்பு இல்லாத மாவட்டங்களிலிருந்து அதிகாரிகள் இங்கே வந்து மாதக்கணக்கில் பணியாற்றினார்கள். உடன் சுமார் 419 தொண்டு நிறுவனங்கள் மீட்புப் பணி தொடங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டது. அந்த நேரத்தில் மக்கள் தன்னெழுச்சியாக அவரவர்களால் முடிந்த அளவுக்கு உதவியைச் செய்துகொண்டே இருந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது."

"சுனாமி சொல்லிக்கொடுத்துச் சென்ற பாடமாக எதைப் பார்க்கிறீர்கள்?"

"2004 சுனாமிக்குப் பிறகு 2005 பேரிடர் மேலாண்மை சட்டம் தொடங்கி பேரிடர் மேலாண்மையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மாநில, மாவட்ட பேரிடர் ஆணையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது சுனாமி என்ன ஒரு சிறிய புயல் காற்று வீசினாலே கண்டறியும் அளவுக்கு அறிவியல் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அதேபோல, சுனாமி சமயத்தில் மக்கள் தங்கவைக்க நிவாரண முகாம்களுக்குக் கூட பெரும் சிக்கல் ஏற்பட்டது. தற்காலிக நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், அந்த சம்பவத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையங்கள் கூட பல்நோக்கு கட்டிடங்களாகக் கட்டப்பட்டன. கடற்கரையில் பாறைகள் கொட்டுவது தொடங்கிப் பல மாற்றங்கள் இங்குச் சுனாமிக்கு பிறகே செய்யப்பட்டது.

"நீங்கள் அப்போது பார்த்த மிக மோசமான மற்றும் நெகிழ்ச்சியான சம்பவங்கள் என்ன?"

"பொங்கி வந்த ஆழிப்பேரலை ஒரு பொழுதில் மொத்தமாகச் சூறையாடிச் சென்றுவிட்டது. அதில், தந்தை இழந்த குழந்தைகள், பிள்ளையை இழந்த பெற்றோர்கள், மனைவியை இழந்த கணவன் என்று பல்லாயிரம் பேர் தங்கள் உறவுகளை இழந்திருந்தார்கள். இருப்பிடம் தொடங்கி வாழ்க்கையில் மொத்த வாழ்வாதாரங்களையும் இழந்திருந்தார்கள். மீனவர்களின் படகுகள் சுக்குநூறாக போயிருந்தது. கிராமங்களும் காணாமல் போயிருந்தன. இப்படி மோசமான சம்பவம் எதற்குமே கொஞ்சமும் பஞ்சமே இல்லை.

சுனாமியில் மீட்கப்பட்டவர்களுடன் ராதாகிருஷ்ணன் 2024

அதேநேரத்தில், அந்த நாகை மக்களின் மன உறுதியைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லை. மிக மோசமான ஒரு சம்பவம். ஆனால், அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்த விதத்தைப் பாராட்டிக்கொண்டே இருக்கலாம். பெற்றோரே இல்லாமல் அன்னை சத்யா இல்லத்தில் வளர்ந்த மீனா, சௌமியா, ஸ்டிபன்ராஜ், போன்ற பல குழந்தைகள் இப்போது படித்து பணிக்குச் செல்கிறார்கள். அதில் சிலருக்குத் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கின்றன. அவர்கள் திருமணத்துக்கும் நான் குடும்பத்துடன் சென்றிருந்தேன். இன்னும் பலர் எங்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த 20 வருடத்தில் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஊருக்குச் செல்லாமல் இருந்ததே இல்லை."

ஒரு ஜாக்கெட் தைக்கிறதுக்கு ஒரு ரூபாதான் கூலி- ஒரு டெய்லரின் கதை

தைக்க வேண்டிய துணிகளைப் போட்டு வெட்டுறதுக்கு ஒரு மர டேபிள், தையல் மெஷின்கள், கடை நிறைய கலர் கலரா துணிகள்... இவற்றுக்கு நடுவுல சையத் மதர் வேலைபார்க்கிறதுக்கு கொஞ்சம் இடம். இவ்ளோ தான் சையத் மதரோட டெய்லர... மேலும் பார்க்க

ஒரு போலீஸ்காரரின் கருணைக் கனவு... நிறைவேற்றி வரும் மகள் | Old Age Home | Human Story

அப்பாவின் கனவு...அப்பாவின் கனவை நிறைவேற்றுவதற்காக அனகாபுத்தூரில் இலவச முதியோர் இல்லம் நடத்தி வருகிறார் ஜெயசித்ரா. ஆண், பெண் என 30 பேர் அந்த இல்லத்தில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். வார இறுதி நாள் ஒன்றில்,... மேலும் பார்க்க

தார்ப்பாய் மூடிய வீடு; ஓதம் ஏறிய தரை-மாற்றுத்திறனாளி மகன்களை பராமரித்து வரும் முதியவரின் துயரக் கதை

இரண்டு மாற்றுத்திறனாளி மகன்களைப் பராமரித்து வாழ்ந்து வரும் 80 வயது முதியவரைப் பற்றிக் கேள்விப்பட்டதும் அவரைக் காண்பதற்காகச் சென்றோம்.தார்ப்பாய் மூடிய குடிசை வீடும், ஓதம் ஏறிய தரையும், உடைபாடுகளுடன் இ... மேலும் பார்க்க

அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டே சரிந்த கிறிஸ்துமஸ் தாத்தா... குன்னூரில் நடந்த சோகம்!

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஏசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் விதமாக உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கிறது. திருச்சபைகள் மூலம் மக்களின் வீடுகளுக்குச் சென்று... மேலும் பார்க்க

`ஊருக்கெல்லாம் பானை வித்தாதான் எங்க பானையில சோறு!' - மண்பாண்டத் தொழிலாளர்கள் வாழ்வாதாரக் கதை

கார்த்திகை திருநாள், தைத்திருநாள் போன்ற தமிழர்களின் பண்டிகை காலத்தில் சிறப்பு சேர்க்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் குறித்து அறிந்து கொள்ள அவர்களின் குடியிருப்புகளுக்கு நே... மேலும் பார்க்க

''அக்கா மீண்டு வந்தா தான் குடும்பமே நடக்கும்'' - பாடகி தஞ்சை செல்வியின் தம்பி உருக்கம்

'ஈசன்' படத்துல 'ஜில்லா விட்டு ஜில்லா வந்த' பாட்டையும், அந்தப்பாட்டை பாடின குரலையும் யாராலும் மறக்க முடியாது. படம் வந்த 2010-ல மட்டுமில்லாம, இன்னிக்கு வரைக்கும் அது ஹிட் பாட்டுதான். ஆனா, அந்தப்பாட்டை ப... மேலும் பார்க்க