செய்திகள் :

Manmohan Singh: ``மன்மோகன் சிங் பேசினால் மக்கள் அனைவரும் கவனிப்பார்கள்!" - ஒபாமா

post image
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக, நிதியமைச்சராக, இரண்டு முறை (2004 - 2014) பிரதமராக இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு சென்று வரலாற்றில் நிலைத்து நிற்கும் மன்மோகன் சிங் (92) நேற்றிரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து, அவருடனான தங்களின் மறக்க முடியாத நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். மன்மோகன் சிங்குக்கு இந்தியா மட்டுமல்லாது உலக அரங்கிலும் நன்மதிப்பு இருந்திருக்கிறது.

மன்மோகன் சிங்

அதற்குச் சான்றாக, மன்மோகன் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் அதிபராகச் செயல்பட்டுவந்த பராக் ஒபாமா (2009 - 2017) பல்வேறு சமயங்களில் அவரைப் பாராட்டியிருக்கிறார். ஒபாமா தனது `A Promised Land' புத்தகத்தில், ``ஒரு சிறிய, அடிக்கடி துன்புறுத்தலுக்குள்ளான சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் உட்சபட்ச பதவிக்கு உயர்ந்திருக்கிறார். உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுவந்ததன் மூலமாகவும், ஊழல் செய்யாமல் சம்பாதித்த நற்பெயரினாலும் மக்களின் நம்பிக்கையை வென்றவர்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

2009-ல் லண்டனில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், ``இந்தியாவின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் மன்மோகன் சிங்கே காரணம். இந்த உச்சி மாநாடு முடியும் நேரத்தில், அவரை நான் நண்பர் என்று அழைக்க முடியும் என நம்புகிறேன்." என்றார். அதைத்தொடர்ந்து, 2010-ல் டொராண்டோவில் (கனடா) நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பேசிய ஒபாமா, ``பிரதமர் பேசும்போது மக்கள் அனைவரும் கவனிப்பார்கள் என்று என்னால் இங்கு கூற முடியும்." என்று மன்மோகன் சிங்கைப் புகழ்ந்தார்.

மன்மோகன் சிங் - ஒபாமா

மேலும், டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில், ``நீங்கள், ஏஞ்சலா மெர்கல் (ஜெர்மனி) அல்லது பிரதமர் மன்மோகன் சிங் அல்லது அதிபர் லீ (தென் கொரியா) அல்லது பிரதமர் எர்டோகன் (துருக்கி) அல்லது டேவிட் கேமரூன் (இங்கிலாந்து) ஆகியோரிடம் கேட்டால், அதிபர் ஒபாமா மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்று கூறுவார்கள். இந்த நட்பும், பிணைப்பும்தான் நாடுகளுக்கிடையிலான உறவைத் திறம்பட செயல்படுத்த முடிந்தது." என்று ஒபாமா கூறியிருந்தார்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

Manmohan Singh : 'வரலாறு உங்களுக்காக கர்ஜிக்கும்' - மெளன மொழி பேசியவரின் முழு வரலாறு!

அந்த இரு சம்பவங்கள்!1999 நாடாளுமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருந்த சமயம் அது. தெற்கு டெல்லியில் மன்மோகன் சிங் போட்டியிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ்க்காரர்கள் களத்தில் குதித்து தீவிரமாக வேலைப் ப... மேலும் பார்க்க

Manmohan Singh: `BMW வேண்டாமே'- மாருதி 800 மீதான மன்மோகன் சிங்-ன் காதல்; பகிரும் முன்னாள் பாதுகாவலர்

நேற்று இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். இவரைப் பற்றிய நினைவுகளை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போதைய உத்தரப்பிரதேச அமைச்சரும், முன்பு மன்மோகன் சி... மேலும் பார்க்க

Annamalai: 'சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்டு போராட்டம்' - அண்ணாமலை நகர்வுகள் கைகொடுக்குமா?

சமீபத்தில் சென்னை, அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இது தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தி.மு.க-வை சேர்ந்தவர் என பா.ஜ.க குற்றம்சாட்டுகிறது. ம... மேலும் பார்க்க

Manmohan Singh: மோடியின் பணமதிப்பிழப்பும், மன்மோகன் சிங் சொன்னதைப் போலவே சரிந்த GDP-ம்!

மத்தியில் 2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த மூன்றாவது ஆண்டில் 2016 நவம்பர் 8-ம் தேதி, `இனி ரூ. 500, ரூ. 1000' ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிர்ச்சியைத் தந்தார் பிரதமர் மோடி. ஒரே நாளில் மொத்த எளிய மக்கள... மேலும் பார்க்க

ஏமனை தாக்கிய இஸ்ரேல்; நூலிழையில் தப்பித்த WHO தலைவர் - தாக்குதல் குறித்து என்ன சொல்கிறார் அவர்?!

பாலஸ்தீனம், லெபனான், இரான்... தற்போது ஏமன் என இஸ்ரேலின் பகை மற்றும் தாக்குதல் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இஸ்ரேலை லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு எப்படி எதிர்க்கிறதோ, அதுபோல ஏமனைச் சேர்ந்த ஹூதி அமைப... மேலும் பார்க்க

'அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் துரதிஷ்டவசமானது...' - அமைச்சர் கோவி.செழியன் சொல்வதென்ன?

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.அண்ணா பல்கலைக்கழகத... மேலும் பார்க்க