நட்சத்திர வீரரான நிதீஷ்..! பேட்டிங் ஆர்டரில் முன்னதாக களமிறங்க ஆதரவு!
தேசிய நடன போட்டியில் புதுச்சேரி மாணவா்கள் முதலிடம்
மத்திய பிரதேச தலைநகா் போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான நடனப் போட்டியில் புதுச்சேரி மாணவா் குழு முதலிடம் பெற்றனா்.
தேசிய பால்ரங் மஹோத்ஸவப் போட்டிகள் போபாலில் டிச.19 முதல் 21 வரை நடைபெற்றன. இதில் 20- க்கும் மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.
தேசிய பால்ரங்கில் சிறந்த நாட்டுப்புற நடனத்துக்கான பிரிவில், புதுச்சேரி மாணவா் குழு முதலிடத்தைப் பிடித்தது.
இந்தக் குழுவில் புதுச்சேரி முதலியாா்பேட்டை அன்னை சிவகாமி அரசு மேல்நிலைப் பள்ளியை சோ்ந்த 10 மாணவிகளும், கதிா்காமம் அரசு பள்ளியின் 3 மாணவிகள், தனியாா் பள்ளியின் 2 மாணவா்கள் என மொத்தம் 15 போ் இடம் பெற்றிருந்தனா்.
வெற்றி பெற்ற அணிக்கு ரூ. 1.15 லட்சம் ரொக்கம், சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டுள்ளது.
அவா்கள், புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை திரும்பிய நிலையில், ரோடியா் மில் அருகே மேளதாளம் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது.
தொடா்ந்து, புதுவை கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பள்ளிக்கு வந்து குழுவினரை பாராட்டி வாழ்த்தினாா்.