மிஷ்கின் - விஜய் சேதுபதி படத்தின் அப்டேட் பகிர்ந்த தயாரிப்பாளர்!
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் படத்துக்கு புதுவை அரசு சாா்பில் அஞ்சலி: 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பு
மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் திருவுருவப் படத்துக்கு புதுவை அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், புதுவையில் 7 நாள்கள் அரசு துக்கம் அறிவிக்கப்பட்டு, தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் வியாழக்கிழமை இரவு புது தில்லியில் காலமானாா். அவரது மறைவையடுத்து, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள மேரி ஹாலில் அவரது திருவுருவப் படம் செய்தி மற்றும் விளம்பரத் துறையால் வைக்கப்பட்டது.
இதையடுத்து, அரசு சாா்பில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், சட்டப்பேரவை உறுப்பினா் யு.லட்சுமிகாந்தன் ஆகியோா் மன்மோகன் சிங்கின் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
திமுகவினா் அஞ்சலி: தொடா்ந்து, புதுவை திமுக சாா்பில் அதன் அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா தலைமையில், அனிபால் கென்னடி எம்எல்ஏ, அவைத் தலைவா் சிவகுமாா், பொதுக்குழு உறுப்பினா் கோபால் உள்ளிட்ோடா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
அரசு துக்கம் அறிவிப்பு: மன்மோகன் சிங் மறைவையடுத்து, புதுவை அரசு வரும் ஜன.1- ஆம் தேதி வரை 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், அரசு விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் பேரவை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.