2024 Kovai Rewind: மேயர் ராஜினாமா, மோடி விசிட், அன்னபூர்ணா GST, அண்ணாமலை சாட்டைய...
மிஷ்கின் - விஜய் சேதுபதி படத்தின் அப்டேட் பகிர்ந்த தயாரிப்பாளர்!
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் தாணு நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி - மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘ட்ரெயின்' (train) எனப் பெயரிட்டுள்ளனர். பிரபல தயாரிப்பாளர் எஸ். தாணு இப்படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு மிஷ்கின் இசையமைக்கிறார்.
ட்ரெயின் படத்தின் நாயகியாக டிம்பிள் ஹயாதியும் முக்கிய கதாபாத்திரங்களில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ் , பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் படம் குறித்து தயாரிப்பாளர் எஸ். தாணு பேசியதாவது:
மிஷ்கின் இயக்கும் ட்ரெயின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. மிஷ்கின் ஆகச் சிறந்த படைப்பாளி. 15 வருடங்களுக்கு முன்பு நான் அவரை சந்தித்தேன். நான் அவரை மிஸ் செய்தேனா அல்லது அவர் என்னை மிஸ் செய்தாரா தெரியவில்லை. ஆனால், இனிமேல் அப்படி நடக்காது. அவர்மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.
மிகச்சிறப்பான படத்தை எடுத்திருக்கிறார். உண்மையான ரயிலில் 10 நாள்கள் படப்பிடிப்பு நடத்தினார். 8 ரயில் பெட்டிகளை உருவாக்கி படப்பிடிப்பு நடத்தியுள்ளார். அது செயற்கையாக உருவாக்கப்பட்டதென கூறவே முடியாது.
படம் திரில்லர் வகையில் உருவாகிவருகிறது. மிகச்சிறந்த படமாக ட்ரெயின் அமையும் என்றார்.