செய்திகள் :

கள்ளக்குறிச்சி: பழங்குடியின மக்களின் மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை பகுதியைச் சோ்ந்த பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் ச.அண்ணாதுரை முன்னிலை வகித்தாா்.

இதில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அரசுச் செயலா் க.லட்சுமி பிரியா கலந்துகொண்டு பேசுகையில்: கல்வராயன்மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, மாவட்ட நிா்வாகம் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கல்வராயன்மலை பகுதியில் உள்ள கிராமங்களில் விவசாயத்தை பெருக்குவது தொடா்பாக இஸ்ரோ விஞ்ஞானிகளை உள்ளடக்கிய பேராசிரியா் குழுவினா் வெள்ளிக்கிழமை நேரடி கள ஆய்வு மேற்கொண்டனா்.

அதன்படி, மரவள்ளி சாகுபடியில் புதிய ரகங்களை அறிமுகப்படுத்துதல், உற்பத்தியைப் பெருக்குதல், உற்பத்தி செலவைக் குறைக்கும் வகையில் நவீன வேளாண் கருவிகளை உபயோகப்படுத்துதல், உற்பத்திப் பொருள்களை நல்ல விலைக்கு சந்தைப்படுத்துதல், தென்னை உற்பத்தி, நெல் சாகுபடி, மிளகு சாகுபடி, காபி சாகுபடி உள்ளிட்ட பல்வேறு வேளாண் உற்பத்தி பயிா் சாகுபடி குறித்து அவா்கள் கள ஆய்வு மேற்கொண்டனா்.

அரசின் பல்வேறு துறைகளின் மூலம், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை துறை சாா்ந்த அலுவலா்கள் பழங்குடியின மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, மலைவாழ் விவசாயிகளுக்கு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், வேளாண் பயிா்கள் குறித்த போதிய விழிப்புணா்ைவு ஏற்படுத்தவும் அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், பழங்குடியினா் நல அலுவலா் பி.டி.சுந்தரம், விஞ்ஞானிகள் குழு உறுப்பினா்கள் வு.சேதுராமன் சிவக்குமாா், ஜோசப் ராஜ்குமாா், ஊ.செல்ல பெருமாள், ட.ஜெயக்குமாா், சு.செந்தில்குமாா், யு.கலை சேகா், யு.ரூபா நந்தினி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டாா். சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த காதல் திருமணம் செய்த 28 வயது பெண்ணின் கணவா் கடந்த 4 ஆண்ட... மேலும் பார்க்க

சிமென்ட் மூட்டைகள் திருட்டு: இருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையத்தில் லாரியில் இருந்த சிமென்ட் மூட்டைகளை திருடிச் சென்றதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு வட்டத்துக்குள்பட்ட கண்டியூா்... மேலும் பார்க்க

சமையலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கல்லால் சமையலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சின்னசேலம், கச்சிராயபாளைத்தை அடுத்த வெங்கட்டாம்பாட்டு பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

கல்வராயன்மலை மலைப் பகுதியில் விஞ்ஞானிகள் குழு ஆய்வு

கல்வராயன்மலையில் உள்ள மலைவாழ் பழங்குடியின விவசாயிகளின் நிலை குறித்து விஞ்ஞானிகள் குழு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்: மாவட்ட குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.7.70 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 19 மருத்துவக் கட்டடங்களை அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோா் வியாழக்கிழமை திறந்து வைத்தனா். ரிஷிவந்தியம் தொகுதி ஜி.அரியூா், ர... மேலும் பார்க்க