செய்திகள் :

25 ஆண்டு நிறைவு செய்த ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை!

post image

புதுதில்லி: இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 28, 1999 அன்று ரிலையன்ஸ் தனது முதல் சுத்திகரிப்பு ஆலையை குஜராத்தின் ஜாம்நகரில் தொடங்கியது.

இந்த சுத்திகரிப்பு ஆலையானது, ஒரே இரவில் இந்தியாவை எரிபொருள் பற்றாக்குறை நாடாக இருந்து, தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றியது. பிறகு உபரி நாடாகவும், அதன் பிறகு ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் பெட்ரோல் மற்றும் எரிவாயுவை ஏற்றுமதி செய்தது. இன்று ஜாம்நகர் உலகின் சுத்திகரிப்பு மையமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், நிலத்தடி மற்றும் கடலுக்கு அடியிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயை பதப்படுத்தி, வெவ்வேறு வெப்பநிலையில் கொதித்து ஆவியாகி பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.

இதையும் படிக்க: வர்த்தகம் 2024

ரிலையன்ஸ் நிறுவனரான திருபாய் அம்பானி, சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் தனது நீண்டகால கனவை நிறைவேற்ற விரும்பியபோது, ஜாம்நகருக்கு அருகிலுள்ள வறண்ட பகுதியான மோதிகாவ்டி பகுதியில் அவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. அப்போது அங்கு சாலைகள், மின்சாரம், போதுமான குடிநீர் கூட இல்லாத பாலைவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என்று திட்ட ஆலோசகர்கள் திருபாய்க்கு அறிவுறுத்தினர்.

முதல் முதலில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை உருவாக்குவது பற்றி முதலில் பேசிய போது, பெரும்பாலான நிபுணர்கள், ஒரு இந்திய நிறுவனமானது மூன்று ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது சாத்தியமில்லை என்றனர்.

அதே வேளையில், உள்கட்டமைப்பு பற்றாக்குறையை மற்றும் ஜாம்நகரைத் தாக்கிய கடுமையான சூறாவளி இருந்த போதிலும், 33 மாதங்களில் ரிலையன்ஸ் இந்த சாதனையை செய்து முடித்தது.

மிக முக்கியமாக, ஆசியாவில் உள்ள சமகால சுத்திகரிப்பு நிலையங்களுடன் ஒப்பிடும்போது, ஆண்டுக்கு 27 மில்லியன் டன் திறன் கொண்ட அலை, அதாவது நாள் ஒன்றுக்கு 5,60,000 பீப்பாய்கள் என்றும், பிறகு அதை 33 மில்லியன் டன்னாக விரிவுபடுத்தப்பட்டது.

இதையும் படிக்க: 21 சதவீதம் சரியும் வீடுகள் விற்பனை

தற்போது ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகமானது, ஆசியாவின் மிகப்பெரிய மாந்தோப்பு அமையபெற்றது. இங்கு சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மா மரங்கள் உள்ளன. இது இங்குள்ள மிகப்பெரிய சதுப்புநில பெல்ட் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளின் புகலிடமாக அமையபெற்றது.

இதனையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு, ரிலையன்ஸ், மற்றொரு சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவியது. இதில் நாள் ஒன்றுக்கு 5,80,000 பீப்பாய்கள் செயலாக்க திறன் கொண்டதாக அமைந்தது. இது ஜாம்நகரை உலகின் மிகப்பெரிய ஒற்றை தள சுத்திகரிப்பு வளாகமாக மாற்றியது.

புதிய சுத்திகரிப்பு ஆலை ஏற்றுமதி சந்தையை மட்டுமே பூர்த்தி செய்யும் வேளையில், பழைய ஆலையானது உள்நாட்டு சந்தை தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை 30% அதிகரிப்பு!

புதுதில்லி: மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மொத்த விற்பனை, 2024 டிசம்பரில், 30 சதவிகிதம் அதிகரித்து 1,78,248 யூனிட்களாக ஆக உள்ளது.இலகுரக வர்த்தக வாகனங்கள் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்... மேலும் பார்க்க

பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை 3,23,125 யூனிட்களாக சரிவு!

புதுதில்லி: பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மொத்த விற்பனை 2024 டிசம்பரில், 1 சதவிகிதம் சரிவடைந்து 3,23,125 ஆக உள்ளது.பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2023 டிசம்பரில் மொத்தம் 3,26,806 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக தனது ... மேலும் பார்க்க

டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 7.3 சதவிகிதமாக அதிகரிப்பு!

புதுதில்லி: நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் டிசம்பரில், 7.3 சதவிகிதம் உயர்ந்து, ரூ.1.77 லட்சம் கோடி ஆக உள்ளது.மத்திய ஜிஎஸ்டி வசூல் ரூ.32,836 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.40,499 கோடியாகவும், ஒருங்கிணை... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றமில்லாமல் ரூ.85.64 ஆக முடிவு!

மும்பை: ஆண்டின் முதல் வர்த்தக அமர்வில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 85.64 ஆக முடிந்தது.வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில், இந்திய ரூ.85.63 ஆகத் தொடங்கி இன்ட்ராடே குறைந்தபட்சமாக ரூ.8... மேலும் பார்க்க

2024ல் கியா இந்தியா விற்பனை 6% அதிகரிப்பு!

புதுதில்லி: தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, கியா இந்தியா, 2024ஆம் ஆண்டில், அதன் மொத்த விற்பனை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 6 சதவிகிதம் உயர்ந்து 2,55,038 யூனிட்டுகளாக உள்ளது.கியா இந்தியா நிறுவ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஏற்றம் கண்ட ஆட்டோ துறை பங்குகள்!

மும்பை: ஆண்டின் முதல் நாள் வர்த்தகத்தில், நேர்மறையான குறிப்பில் பயணித்து, முதலீட்டாளர்களின் உணர்வை வெகுவாக ஈர்த்ததால், பெஞ்ச்மார்க் குறியீடான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இன்று உயர்ந்து முடிந்தது.இன்றைய... மேலும் பார்க்க