ED: ``தமிழ்நாட்டில் Tent போட்டு தங்கிடுறாங்க'' -அமலாக்கத்துறை சோதனை குறித்து ஜோத...
மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை 30% அதிகரிப்பு!
புதுதில்லி: மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மொத்த விற்பனை, 2024 டிசம்பரில், 30 சதவிகிதம் அதிகரித்து 1,78,248 யூனிட்களாக ஆக உள்ளது.
இலகுரக வர்த்தக வாகனங்கள் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்திற்கு சப்ளை, உள்ளிட்ட ஒட்டுமொத்த உள்நாட்டு விற்பனை 2023 டிசம்பரில் 1,06,492 யூனிட்டுகளிலிருந்து 24.44 சதவிகிதம் அதிகரித்து 1,32,523 யூனிட்களாக இருந்தது என்று மாருதி சுசூகி இந்தியா தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மொத்த உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 2024 டிசம்பரில் 1,30,117 யூனிட்களாக இருந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்தில் 1,04,778 யூனிட்களாக இருந்தது. இது 24.18 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை 3,23,125 யூனிட்களாக சரிவு!
ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ அடங்கிய மினி கார்களின் விற்பனை 2,557 என்ற எண்ணிக்கையிலிருந்து அதிகரித்து 7,418-ஆனது.
இதேபோல் பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்-ஆர் ஆகிய காம்பேக்ட் கார்களின் விற்பனை 2023 டிசம்பரில் 45,741 யூனிட்களாக இருந்த நிலையில் தற்போது 54,906 யூனிட்களாக அதிகரித்துள்ளது.
பிரெஸ்ஸா, எர்டிகா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி மற்றும் எக்ஸ்எல்-6 உள்ளிட்ட பயன்பாட்டு வாகனங்கள் 2024 டிசம்பரில் 55,651 யூனிட்களை விற்பனை ஆனது. இது முந்தைய ஆண்டில் 45,957 யூனிட்களாக இருந்தது.
நடுத்தர அளவிலான செடான் வாகனமான சியாஸின் விற்பனை 2023 டிசம்பரில் 489 யூனிட்களுடன் ஒப்பிடும்போது இது 464 யூனிட்களாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் 26,884 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், டிசம்பர் மாதத்தில் 37,419 யூனிட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.