செய்திகள் :

``மேலிட சார் உத்தரவால், எங்களை கைது செய்து ஆட்டு மந்தையில் அடைத்துள்ளனர்..'' - குஷ்பு டென்ஷன்!

post image

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு பேரணி தொடங்கிய நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

மண்டபத்துக்குள்

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்கும் பாஜக மகளிர் அணியினரின் போராட்டம் மதுரையில் தொடங்கி திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை வந்து அங்கு ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில, `தடையை மீறி பேரணி நடத்துவோம்' என்று பாஜகவினர் மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோயில் முன்பாக குழுமினார்கள்.

செல்லத்தம்மன் கோயிலில் உள்ள கண்ணகி சிலைக்கு மிளகாய் பொடி அரைத்து பூசியும் தீச்சட்டி ஏந்தியும் மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மகளிரணி நிர்வாகிகள் குஷ்பு, உமா ரதி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

`நான்கு ஆண்டுகளில் என்ன செய்தீர்கள்?' - குஷ்பு

அப்போது பேசிய குஷ்பு, "நீதிக்காக வந்த கூட்டம் இது, திமுகவினர் மாதிரி பிரியாணி கொடுத்து கூட்டி வந்த கூட்டம் அல்ல. ஒவ்வொரு ஆண் இருக்கும் வீட்டிலும் சகோதரியாக, மனைவியாக, மகளாக ஒரு பெண் இருக்கிறார்.

திமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் நம்மை பார்த்து பப்ளிசிட்டி தேடுகிறார்கள் என கூறுகிறார்கள், பாஜக பப்ளிசிட்டியை விரும்புவதில்லை. பப்ளிசிட்டியும், விளம்பரமும் தேவைப்படுவது திமுகவினருக்குதான். கையில் சீட்டு வைத்து பேசும் முதல்வருக்கு பெண்களை காப்பாற்ற வக்கில்லை. கட்சிக்கு அப்பாற்பட்டு ஒரு முதல்வர், பாலியல் வன்கொடுமைக்கு ஆனான பெண்ணுக்கு ஒரு சகோதரராக, ஒரு தந்தையாக முன்னிற்க வேண்டும். இன்றைக்கு ஒரு பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நாளைக்கு என் வீட்டிலும் உங்கள் வீட்டிலும் உள்ள பெண் குழந்தைகளுக்கு பிரச்சனை ஏற்படும். பெண்களுக்கு சுய மரியாதையை கற்றுக்கொடுத்தவர் கலைஞர், அவர் குடும்பத்தில் வந்த நீங்கள் நான்கு ஆண்டுகளில் என்ன செய்தீர்கள்? ஊழலுக்கு பெயர் போன கட்சி திமுக, மற்றவர்களைப் பார்த்து ஊழல் என்று சொல்லக்கூடாது.

ஆர்பாட்டத்தில் குஷ்பு

`குற்றவாளிகளை கண்டுபிடிக்க இவ்வளவு நாளா?'

எங்களுக்கு தேவை நீதி, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வீட்டிற்கு பத்திரமாக வருவார்களா என்ற அச்சம் உள்ளது. பள்ளி அருகே போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. மொபைல் மூலம் டிரேஸ் செய்து கண்டுபிடிக்க கூடிய காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவி விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இவ்வளவு நாளா? தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிக்கு சமம். இந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்த 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் யாருடைய அதிகாரத்தில் இருக்கிறது. நீங்கள் போலீசை வைத்து பயமுறுத்தினாலும் பிரதமர் குறிப்பிடும் நாரி சக்தி என்னவென்று காட்டுவோம் " என்று பேசினார்.

அதன் பின்பு அனைவரையும் கைது செய்ய காவல்துறை முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் குஷ்பு தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு குஷ்பு உள்ளிட்ட மகளிர் அணியினரை கைது செய்த காவல்துறையினர் திருமண மண்டபங்களில் அடைத்தனர்.

`ஆட்டு மந்தையில்...'

குஷ்பு, உமா ரதி உள்ளிட்டோரை சிம்மக்கல் பகுதியில் உள்ள 'ஆயிரம்வீட்டு யாதவர் ஆட்டுமந்தை திருமண மண்டப'த்தில் அடைத்தனர்.

'ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் எங்களை அடைத்து வைத்துள்ளதால், ஆடுகளின் சத்தத்தோடு கடுமையான துர்நாற்றம் வீசுவதால் அங்கு இருக்க முடியவில்லை, எங்களை இழிவுபடுத்த இதுபோன்ற ஆட்டு மந்தையில் அரசு எங்களை அடைத்து வைத்திருக்கிறது' என்று புகார் எழுப்பியவர்கள், காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி மண்டபத்திற்குள்ளேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆட்டு மந்தையில் பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை அடைத்து வைத்ததாக கூறி வெளியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகளை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதனால் சிம்மக்கல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் குஷ்பு உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபம் அருகேயுள்ள மந்தைக்கு மேலும் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் கொண்டுவரப்பட்டது. அப்போது மண்டபத்தின் முன்பாக கூடியிருந்த பாஜகவினருக்கும் ஆட்டுமந்தைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மண்டப வளாகத்தில் அடைக்கப்பட்ட ஆடுகள்

கைது செய்யப்பட்டதால் லண்டன் பயணம் ரத்து

தன் மகளுடன் இரவு 9 மணிக்கு சென்னையிலிருந்து லண்டன் செல்ல திட்டமிருந்த குஷ்பு போராட்டத்தில் கலந்துகொண்டு மதியம் 3.30 மணிக்கு மதுரையிலிருந்து விமானத்தில் சென்னை செல்லத் திட்டமிட்டிருந்தார். அதற்காக முன்னதாக விடுவிக்க முடியுமா என்று காவல்துறை தரப்பில் பாஜகவினர் வேண்டுகோள் வைத்ததாக சொல்லப்பட்ட நிலையில், காவல்துறை மறுத்துள்ளது. இதனால் மண்டபத்துக்குள் கூட்டத்தினரோடு இருந்த குஷ்பு படபடப்புடன் இருந்தார். இதற்கிடையே குஷ்புவை பார்ப்பதற்காக பொதுமக்கள் வருகை தர ஆரம்பித்ததால் சிம்மக்கல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் பின்பு மாலை 6 மணிக்கு மேல்தான் குஷ்பு விடுவிக்கப்பட்டார்.

"ஆட்டுக்குட்டிகள் இருந்த இடத்தில் அடைத்து வைத்தார்கள், பரவாயில்லை. மேலிட உத்தரவை ஃபாலோ அப் செய்து ஆட்டு மந்தையில் அடைத்தார்கள், காவல்துறையினர் மேலிட சார் உத்தரவை ஃபாலோ அப் செய்துள்ளனர். எங்களது போராட்டம் வெற்றிபெற்றுள்ளது" என்று கூறிவிட்டு கிளம்பினார்.

TN Assembly: ``அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?'' - ஆளுநருக்கு குறித்து முதல்வர்

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் சர்ச்சையுடனே தொடங்கியிருக்கிறது. இன்று காலை தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் பாடப்ப... மேலும் பார்க்க

நான் கலைஞரை சந்தித்த தருணம்! - முன்னாள் பாஜக நிர்வாகியின் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

TN Assembly: `திட்டத்தோடுதான் ஆளுநர் வந்திருக்கிறார்; அதிமுக அரசியல் செய்கிறது'- திருமா சொல்வதென்ன?

சட்ட பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் வெளியேறியதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்தது. இதற்காக ஆளுநர் ரவி இன்று கால... மேலும் பார்க்க

TN Assembly: ஆளுநரின் விளக்கம், X-ல் நீக்கப்பட்ட பதிவுக்கும் - புதிய பதிவுக்கும் என்ன வித்தியாசம்?

2025-ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், தமிழ்த்தாய் வாழத்துக்குப் பிறகு தேசியக் கீதம் பாடப்படவில்லை என, ஆளுநர் ரவி சபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

TN Assembly: 2022 முதல் இப்போது வரை... தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை சர்ச்சையும் காரணமும்!

கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழ்நாடு சட்டசபையில் 'ஆளுநர் உரை' என்றாலே சர்ச்சையாகத் தான் உள்ளது. 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்றார் ஆர்.என் ரவி. அப்போதிருந்து இன்று வரையான ஆளுந... மேலும் பார்க்க

Prashant Kishor: மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதம்; பிரசாந்த் கிஷோர் கைது!

பீகாரில் கடந்த மாதம் 13-ம் தேதி அரசு பணிகளுக்கான பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (BPSC) தேர்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள்கள் ஏற்கெனவே கசிந்துவிட்டதாக கூறி மாணவர்கள் வன்முறையில்... மேலும் பார்க்க