ED: ``தமிழ்நாட்டில் Tent போட்டு தங்கிடுறாங்க'' -அமலாக்கத்துறை சோதனை குறித்து ஜோதிமணி சொல்வதென்ன?
அமலாக்கத்துறை சோதனை குறித்து ஜோதிமணி பேசியிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு கரூர் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஜோதிமணி தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் இன்று கரூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி ஜோதிமணியிடம் அமலாக்கத்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அமலாக்கத்துறை தமிழகத்திற்கு வருவது புதிய விஷயம் கிடையாது. குறிப்பாக எதிர்கட்சி ஆளும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு செல்ல திசையே அவர்களுக்கு தெரியாது. அதனால், அமலாக்கத்துறை தமிழகத்திற்கு வராமல் இருந்தால்தான் அதிசயம்.
எந்த மாநில அரசுகள் எல்லாம் கடுமையாக நரேந்திர மோடி அரசாங்கத்தை எதிர்கிறார்களோ அந்த மாநிலத்தில் அமலாக்கத்துறை டென்ட் (Tent) போட்டு தங்கிடுவார்கள். திண்டுக்கல்லில் பாஜக கட்சியைச் சேர்ந்த அண்ணாமலையின் அக்கா கணவருக்கு நெருக்கமானவர் வீட்டில் அமலாக்கத்துறை முதன் முறையாக சோதனை நடத்தி 13 கோடி ரூபாயை கைப்பற்றி, 250 கோடி மதிப்பிலான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது.
அது குறித்து அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினால் ஜோதிமணி, செந்தில் பாலாஜி, விஜயபாஸ்கர் ஆகியோர் எனக்கு சொந்தம் என்கிறார். அண்ணாமலைக்கு அவரது அக்காவின் கணவர் சிவகுமார் சொந்தக்காரரா இல்லையா? ஒரு வேளை வழி தவறி போயிருக்கலாம்" என ஜோதிமணி பேசியிருக்கிறார்.