இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.85.79-ஆக முடிவு!
மும்பை: இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரித்த நிலையில், உள்நாட்டில் பங்குச் சந்தை வணிகமானது முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்ததால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 4 காசுகள் சரிந்து ரூ.85.79 ஆக முடிந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் பலவீனமான குறிப்பில் தொடங்கி, அதன் இன்ட்ரா டே வர்த்தகத்தில் குறைந்தபட்சமாக ரூ.85.80 ஆகவும், அதிகபட்சமாக ரூ.85.73 ஆகவும், கடைசியில் 4 காசுகள் சரிந்து ரூ.85.79ஆக நிலைபெற்றது.
இதையும் படிக்க: இந்தியாவின் புகையிலை ஏற்றுமதி 8% அதிகரிப்பு!
கடந்த ஆண்டு பெரும்பாலான நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு உயர்ந்ததாகவும், இந்த ஆண்டும் டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவான நிலையில் இருப்பதாகவும் அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கியானது, அமெரிக்க டாலர்களை தொடந்து விற்பனை செய்ததால், இந்தியா ரூபாயின் வீழ்ச்சி சற்று தடுத்து நிறுத்தப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை அன்று வர்த்தகநேர முடிவில் அந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.85.75-ஆக இருந்தது.
டிசம்பர் 27 அன்று, இன்ட்ரா-டே வர்த்தகத்தில் இந்திய ரூபாய் அதன் வாழ்நாள் சரிவாக ரூ.85.80 ஐ முடிந்தது குறிப்பிடத்தக்கது.