BB Tamil 8 Exclusive: சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? - மனம் திறக்கும் விஷ்ணு
உன்னி முகுந்தனின் மார்கோ ரூ. 100 கோடி வசூல்!
நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளது.
இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் கடந்த டிச. 20 தேதி வெளியானது.
அதிக வன்முறைக் காட்சிகள் கொண்ட ஆக்சன் படமான இது கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும், உலகளவில் இப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: முபாசா இந்தியாவில் ரூ.150 கோடி வசூல்!
இது உன்னி முகுந்தனின் முதல் ரூ. 100 கோடி திரைப்படமாகும். மேலும், நூறு கோடி வசூலித்த மலையாள சினிமாவின் பட்டியலில் 8வது இடத்தைப் பெற்றுள்ளது.
இப்படத்திற்கு, கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.