Justin Trudeau:`இந்தியாவுடன் உரசல்... பொருளாதார சிக்கல்' - ஜஸ்டின் ட்ரூடோ ராஜினா...
நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அறிவிப்பை ரத்து செய்தது வங்கதேசம்
நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கும் அறிவிப்பை வங்கதேச இடைக்கால அரசு ஞாயிற்றுகிழமை ரத்து செய்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தைச் சோ்ந்த 50 நீதிபதிகள் இந்தியாவில் அரசு நீதித்துறை அகாதெமிகளில் 10 நாள்கள் பயிற்சி பெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாதெமி மற்றும் மாநில நீதித்துறை அகாதெமியில் வரும் பிப்ரவரி 10 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த பயிற்சிக்கான முழு செலவையும் இந்திய அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பறவைக் காய்ச்சல் பாதிப்பு: பலியான சிறுத்தை, புலிகள்!
முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தஞ்சம், ஹிந்துக்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களால் பாதிப்படைந்துள்ள இருநாட்டு உறவில் இந்த நடவடிக்கை முக்கிய முன்னேற்றமாக பாா்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சட்ட அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க ரத்து செய்யப்பட்டதாக டெய்லி ஸ்டார் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
மாணவா்கள் தலைமையிலான மாபெரும் போராட்டத்தைத் தொடா்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி, வங்கதேச பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தாா். இதையடுத்து ஆட்சி பொறுப்பேற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில், ஹிந்துக்கள் மற்றும் அவா்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது தொடா் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், இந்தியா-வங்கதேசம் உறவில் நெருக்கடி நிலவுகிறது.