Anna University: ``சாரிடம் ஞானசேகரன் பேசினார்" - சிறப்பு விசாரணைக் குழுவிடம் உறு...
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மீட்பு!
ராஜஸ்தானின் கோட்புட்லி - பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் கடந்த டிச.23 அன்று விளையாடிக் கொண்டிருந்த சேத்துனா என்ற 3 வயது பெண் குழந்தை அங்கு தோண்டப்பட்டிருந்த 700 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
இதைத் தொடர்ந்து குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே சுமார் 160 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு குழந்தையை உயிருடன் மீட்க தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. நிலத்துக்கு கீழே கடுமையான பாறைகள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் பாறைகளைத் துளைக்கும் சவாலான பணிகளை மேற்கொண்ட மீட்புப்படையினர் குழந்தையை மீட்கும் பணியில் இரவு பகல் பாராமல் கடந்த 10 நாள்களாக ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், அந்த குழந்தை இன்று(ஜன. 1) மாலை ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியே மீட்கப்பட்டுள்ளது. உடனடியாக அவசர ஊர்தியில் மருத்துவச் சிகிச்சைக்காக குழந்தையை மீட்புக்குழுவினர் அழைத்துச் சென்றுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.