தேசிய கீதம் இருமுறை இசைக்கப்பட வேண்டும் என்பது சட்டம்: அண்ணாமலை
மாணவர்களிடையே தகராறு; 7-ஆம் வகுப்பு மாணவர் குத்திக் கொலை!
தில்லியில் மாணவர்களுக்கு இடையேயான மோதலில் 7 ஆம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் அரசு உதவிபெறும் ஒரு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் இஷு குப்தாவுக்கும், அவரது சக நண்பர்களுக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில், பள்ளி நுழைவாயில் அருகே குப்தாவுக்கும் அவரது சக நண்பர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.
தொடர்ந்து, அவர்கள் வைத்திருந்த கத்தியால் குப்தாவை தாக்கியுள்ளனர். வலது தொடையில் பலத்த காயமடைந்த குப்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போதைத் தடுப்பு போலீஸாரும் உடன் சென்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 7 சந்தேக நபர்களைக் காவல்துறை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடப்பதாகவும் கூறினர்.