பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை 3,23,125 யூனிட்களாக சரிவு!
புதுதில்லி: பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மொத்த விற்பனை 2024 டிசம்பரில், 1 சதவிகிதம் சரிவடைந்து 3,23,125 ஆக உள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2023 டிசம்பரில் மொத்தம் 3,26,806 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 7.3 சதவிகிதமாக அதிகரிப்பு!
மொத்த இருசக்கர வாகன விற்பனை 2,83,001 என்ற எண்ணிக்கையிலிருந்து 4 சதவிகிதம் குறைந்து 2,72,173-ஆனது. மேலும் உள்நாட்டில் இரு சக்கர வாகன விற்பனை 1,58,370 என்ற எண்ணிக்கையிலிருந்து 19 சதவிகிதம் குறைந்து 1,28,335-ஆனது.
இரு சக்கர வாகன ஏற்றுமதி 2023 டிசம்பரில் 1,24,631 யூனிட்களை விட 15 சதவிகிதம் அதிகரித்து 1,43,838 யூனிட்களாக உள்ளது.
மொத்த வர்த்தக வாகன விற்பனை 2024 டிசம்பரில் 16 சதவிகிதம் அதிகரித்து 50,952 யூனிட்களாக இருந்தது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.