டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 7.3 சதவிகிதமாக அதிகரிப்பு!
புதுதில்லி: நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் டிசம்பரில், 7.3 சதவிகிதம் உயர்ந்து, ரூ.1.77 லட்சம் கோடி ஆக உள்ளது.
மத்திய ஜிஎஸ்டி வசூல் ரூ.32,836 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.40,499 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஐஜிஎஸ்டி ரூ.47,783 கோடியாகவும், செஸ் ரூ.11,471 கோடியாகவும் உள்ளது.
மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் டிசம்பரில் 7.3 சதவிகிதம் உயர்ந்து ரூ.1.77 லட்சம் கோடியாக உள்ளது.
டிசம்பர் மாதம் உள்நாட்டு பரிவர்த்தனைகள் மீதான ஜிஎஸ்டி 8.4 சதவிகிதம் உயர்ந்து ரூ.1.32 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மீதான வரி வருவாய் சுமார் 4 சதவிகிதம் உயர்ந்து ரூ.44,268 கோடியாகவும் இருந்தது.
அதே நவம்பரில், ஜி.எஸ்.டி. வசூல் 8.5 சதவிகித வளர்ச்சியுடன், ரூ.1.82 லட்சம் கோடி இருந்தது. அதிகபட்ச வசூல் ஏப்ரல் 2024 ல் ரூ.2.10 லட்சம் கோடிக்கு மேல் இருந்தது. அதே வேளையில், டிசம்பர் மாதத்தில் ரூ.22,490 கோடி திருப்பியளிக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டை விட 31 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.