Anna University: ``சாரிடம் ஞானசேகரன் பேசினார்" - சிறப்பு விசாரணைக் குழுவிடம் உறு...
தணிக்கைக் குழுவின் பாராட்டில் ‘காதல் என்பது பொதுவுடைமை’!
காதல் என்பது பொதுவுடைமை படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவரம் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காதல் என்பது பொதுவுடமை. நவீன காதல் கதையைப் பேசும் படமாக உருவான இது கடந்தாண்டு கோவா திரைப்பட விழாவில் பங்கேற்று பாராட்டுகளைப் பெற்றது.
முக்கிய கதாபாத்திரத்தில் லிஜோ மோல் ஜோஸ், வினீத், ரோகினி, அனுஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருந்த இப்படம் வரும் காதலர் நாளன்று பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தை பிரபல மலையாள இயக்குநரான ஜியோ பேபி வழங்குகிறார்.
ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் லென்ஸ், மஸ்கிடோ ஃபிலாஸபி, தலைக்கூத்தல் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் யு/ஏ என படத்துகு மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
யு/ஏ- அனானிமஸ் அப்ரிசேஷன். தணிக்கைக்குழு படத்தினை அபாரமாக இருக்கிறதென பாராட்டியதாகவும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.