வெளியானது ஜீவாவின் ‘அகத்தியா' பட டீசர்
ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அகத்தியா' படத்தின் டீசர் வெளியானது.
பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் புதிய படம் அகத்தியா. இதில் ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் படத்தை தயாரித்து வருகிறார். படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜனவரி 31 திரையரங்குகளில் வெளியாகிறது.
காதலிக்க நேரமில்லை: புதிய பாடல் அறிவிப்பு!
ஹாரர் த்ரில்லர் பாணியில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. முன்னதாக ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான பிளாக் படம் வெற்றி பெற்றது.
அதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ‘அகத்தியா' படத்தின் டீசரை படக்குழு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.