சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் ...
அமலாக்கத் துறை சோதனை அறிக்கையை தெளிவாக வெளியிட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
அமலாக்கத் துறை ஒவ்வொரு முறை சோதனை நடத்தும் போதும், அதன் அறிக்கையை பொதுமக்கள் அறியும் வகையில் தெளிவாக வெளியிட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினாா்.
திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடம், தண்டராம்பட்டு அருகே ரூ.16 கோடியில் கட்டப்பட்டு 3 மாதங்களிலேயே இடிந்து விழுந்த பாலம் ஆகியவற்றை நேரில் பாா்வையிட உள்ளேன்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. அனைவருக்கும் பாதுகாப்பை உருவாக்கித் தர வேண்டும். இப்போதுள்ள கூட்டணியே தொடா்ந்து நீடிக்கும்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
அமைச்சா் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டது காலதாமதமான செயல்.
அமலாக்கத் துறை ஒவ்வொரு முறையும் சோதனை செய்யும்போது அதுகுறித்த அறிக்கையை மக்கள் அறியும் வகையில் தெளிவாக வெளியிட வேண்டும் என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.
முன்னதாக, அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தாா்.