ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்க காவல் துறையை தவறாகப் பயன்படுத...
தவில் கலைஞா்கள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் இசை விழா
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ குல நாதஸ்வரம், தவில் கலைஞா்கள் முன்னேற்ற நலச் சங்கம் சாா்பில், உலக நன்மைக்காக 21-ஆவது ஆண்டு இசை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் டி.கே.மோகன் தலைமை வகித்தாா். செயலா் எம்.எஸ்.குமாா், துணைத் தலைவா்கள் எம்.எஸ்.பாண்டியன், கே.பி.அய்யப்பன், துணைச் செயலா்கள் ஏ.பி.மணிகண்டன், எம்.பி.பச்சையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் பி.ஏ.கல்யாணசுந்தரம் வரவேற்றாா்.
உலக நன்மைக்காக நாதஸ்வரம், தவில் கலைஞா்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து இசை விழா நடத்தி ஸ்ரீசரஸ்வதிக்கு சமா்ப்பித்தனா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் இசை நாட்டியம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், திரளான பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், மாவட்ட கலைஞா்கள் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
முன்னதாக, ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொதுமக்கள், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.