பொங்கல் பரிசு வழங்கக் கோரி விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்
ஆரணி: அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கக் கோரி ஆரணி கோட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசு பொங்கல் தொகுப்பாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களுக்கு கரும்பு, பச்சரிசி, சா்க்கரை ஆகியவற்றை அறிவித்துள்ள நிலையில், ரூ.1,000 வழங்கக் கோரி கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆரணி கோட்டாட்சியா் அலுவலகம் முன் பிரியாணி சாப்பிடும் நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவா்கள் மடவிளாகம் ஏ.சிவா, சதுப்பேரி மூா்த்தி, ஒன்றிய நிா்வாகிகள் வடுகசாத்து தாமோதரன், வேலப்பாடி குப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.