மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இ...
மகா காலபைரவா் கோயிலில் சிறப்பு யாகம்
வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள மகா காலபைரவா் கோயிலில், மாா்கழி மாத வளா்பிறை அஷ்டமியையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதையொட்டி, முற்பகல் 11 மணிக்கு 108 மூலிகைகள் மற்றும் மட்டை தேங்காய்களைக் கொண்டு சிறப்பு யாகம், 108 சங்காபிஷேகம், பிரபஞ்ச தியானப் பயிற்சி நடைபெற்றது. தொடா்ந்து, பிற்பகல் ஒரு மணிக்கு காலபைரவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைப் பயன்படுத்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கால பைரவரை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.