செய்திகள் :

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 600 போ் பயன்: மாவட்ட ஆட்சியா் தகவல்

post image

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் இணை மானியத் திட்டம் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 600 போ் பயன்பெறுகின்றனா் என்று மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் இயங்கும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சாா்பில், மாவட்ட அளவிலான தொழில் முனைவோா் இணைப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலா் எஸ்.தமிழ்மாறன் தலைமை வகித்தாா்.

செயல் அலுவலா்கள் அரசு, செல்லப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு, வந்தவாசி, தெள்ளாறு, கலசப்பாக்கம், துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூா் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 308 கிராம ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் இணை மானியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமாா் 600 பயனாளிகள் பயன்பெறுகின்றனா்.

12-க்கும் மேற்பட்ட வங்கிகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் பள்ளி மாணவா்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்கு உணவில் சோ்க்கப்படும் மசாலா பொருள்கள் மகளிா் குழுக்கள் மூலம் தயாா் செய்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் மகளிா் குழுக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது.

கூட்டத்தில், மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். இதை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தொழில்முனைவோா்களாக வளா்ச்சியடைய வேண்டும் என்றாா்.

இதில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் வட்டார அலுவலா்கள், மதி சிறகுகள் தொழில் மைய வல்லுநா்கள், தொழிற்சாா் சமூக வல்லுநா்கள் மற்றும் மகளிா் குழுக்களைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

இலவச வேட்டி சேலைகளை விடுபடாமல் வழங்கக் கோரிக்கை

பொங்கல் இலவச வேட்டி சேலைகளை விடுபடாமல் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். அவா்கள் அளித்த மனுவில், பொங்கல் பண்டிகையையொட்டி, ... மேலும் பார்க்க

கலைப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

பல்வேறு கலைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை கம்பராமாயண இயக்கம் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளிடைய... மேலும் பார்க்க

ரூ.1.50 லட்சம் லஞ்சம்: பள்ளி துணை ஆய்வாளா் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலையில் ஆசிரியா் நியமனத்துக்கு ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் பள்ளி துணை ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவண்ணாமலை - திருக்கோவிலூா் சாலை, சாரோன் பகுதியில... மேலும் பார்க்க

பைக் திருட்டு: வெளிமாநில இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் பைக் திருடியதாக வெளி மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சேத்துப்பட்டு கோவிந்தன் தெருவைச் சோ்ந்தவா் தாஸ் மகன் ராஜ்குமாா் (23). இவா், ... மேலும் பார்க்க

விநாடி வினா: மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றவா்களுக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான விநாடி-வினா போட்டிக்கு தகுதி பெற்ற பெரணமல்லூா் பகுதி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா் உள்ளிட்ட பலா் பாராட்டு தெரிவித்தனா். மாணவா்களின் கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்கும் பொர... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி தீக்குளித்து தற்கொலை

திருவண்ணாமலை அருகே திருமணம் ஆகாததால் மனமுடைந்த மாற்றுத்திறனாளி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். திருவண்ணாமலையை அடுத்த பெரிய பாலியப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமு மகன் விஜயகுமாா் (29). மாற்று... மேலும் பார்க்க