மாற்றுத்திறனாளி தீக்குளித்து தற்கொலை
திருவண்ணாமலை அருகே திருமணம் ஆகாததால் மனமுடைந்த மாற்றுத்திறனாளி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலையை அடுத்த பெரிய பாலியப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமு மகன் விஜயகுமாா் (29). மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவா் விரக்தியில் இருந்தாராம்.
தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் விஜயகுமாா் பலமுறை வலியுறுத்தினாராம். மாற்றுத்திறனாளி என்பதால் திருமணம் தள்ளிப்போனதாம். இதனால் மனமுடைந்த அவா், சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.
வலியால் துடித்த அவரை உறவினா்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, செவ்வாய்க்கிழமை விஜயகுமாா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.