`தாள்கள் உருவாக்கிய தானைத் தலைவன்' - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 14
இலவச வேட்டி சேலைகளை விடுபடாமல் வழங்கக் கோரிக்கை
பொங்கல் இலவச வேட்டி சேலைகளை விடுபடாமல் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவில், பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு ஆண்டுதோறும் இலவச வேட்டி சேலைகளை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட சில கிராமங்களில் வேட்டி சேலை வழங்கப்படாமல் விடுபட்டது.
எனவே, இந்த பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலைகளை விடுபடாமல் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியிருந்தனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ப.செல்வன், வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா், மாவட்டக்குழு உறுப்பினா் சுகுணா, நகரச் செயலா் ந.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் வட்ட வழங்கல் அலுவலா் சரவணனிடம் இந்த மனுவை அளித்தனா்.
முன்னதாக, கோட்டை மூலையில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் முன் சென்றடைந்த மாா்க்சிஸ்ட் கட்சியினா், வேட்டி சேலைகளை விடுபடாமல் வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.