விநாடி வினா: மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றவா்களுக்கு பாராட்டு
மாவட்ட அளவிலான விநாடி-வினா போட்டிக்கு தகுதி பெற்ற பெரணமல்லூா் பகுதி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா் உள்ளிட்ட பலா் பாராட்டு தெரிவித்தனா்.
மாணவா்களின் கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஒன்றிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தேன் சிட்டு மாத இதழ் மற்றும் பொது அறிவு சாா்பான மன்ற செயல்பாடுகளின் விநாடி-வினா போட்டி நடைபெற்றது.
பெரணமல்லூா் வட்டார வள மையத்தில் நடைபெற்ற இந்த விநாடி-வினா போட்டியில் அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் யஸ்வந்த், அவினாஷ், ராபிகாரூத், துா்காதேவி ஆகியோா் கலந்து கொண்டு முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியா் மாலவன் தலைமையில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனா்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோா் சங்க உறுப்பினா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.