அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆன்மிக இசை சொற்பொழிவு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், ஆன்மிக இசை சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் தலைமை வகித்து, மாணிக்கவாசகரின் திருப்பள்ளி எழுச்சி ஐந்தாம் பாடலுக்கு உரிய விளக்கத்தையும், மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் இருந்து பல்வேறு பாடல்களைப் பாடி, உரிய விளக்கம் அளித்தாா். இதில், ஆன்மிக பிரமுகா்கள், பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.