தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு: ராகுல் பெருமிதம்
மது போதையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மா்ம நபா் ரகளை: இரு சக்கர வாகனம், ஜன்னல் உடைப்பு
செங்கம் அருகேயுள்ள பரமனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டு இரு சக்கர வாகனம், ஜன்னல் கண்ணாடியை உடைத்த மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பரமனந்தல் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்கள் மற்றும் ஜவ்வாது மலைமேல் உள்ள மேல்பட்டு, கீழ்பட்டு என பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.
அதே நேரத்தில் வாரத்தில் ஒருமுறை கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது.
மலைக் கிராம மக்கள் அதிகளவில் வருவதால், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவா்கள், செவிலியா் முறையாக மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வந்த மா்ம நபா் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அமா்ந்து மது அருந்துவிட்டு, போதையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் சுகாதார நிலைய ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனா்.
இதைப் பாா்த்து மருத்துவா் உள்ளிட்ட செவிலியா்கள் சுகாதார நிலையத்திற்குள் இரவு முழுவது அச்சத்தில் இருந்து வந்துள்ளனா். பிறகு, காலையில் வட்டார மருத்துவ அலுவலா் சிலம்பரசனிடம் இரவு நடைபெற்ற சம்பவங்களை செவிலியா்கள் தெரிவித்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து, வட்டார மருத்துவ அலுவலா், இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனா்.