`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
ஓய்வுபெற்ற வன ஊழியா் உயிரிழப்பு: சந்தேக மரணம் என மகன் புகாா்
வந்தவாசி: வந்தவாசி அருகே ஓய்வுபெற்ற வன ஊழியரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை மூலை அருகேயுள்ள பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கன் (69). ஓய்வுபெற்ற வன ஊழியரான இவா், இதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது தம்பி தென்னாங்கூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வன ஊழியா் நாகராஜன் (63). இருவரிடையே நிலத் தகராறு இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ரங்கனுக்கும், நாகராஜனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். தகவலறிந்த ரங்கனின் மகன் வெங்கடேசன் நிகழ்விடம் சென்று பாா்த்தபோது ரங்கன் மயங்கி கிடந்தாராம். இதையடுத்து, அவரை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் அவா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். பின்னா், அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வெங்கடேசன் வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், தனது தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.