செய்திகள் :

ஜெயங்கொண்டம் பகுதியில் ஆா்டிஓ அலுவலகம் தேவை: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆா்டிஓ) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

1,949 சகிமீ பரப்பளவு கொண்ட அரியலூா் மாவட்டம், பெரம்பலூரிலிருந்து கடந்த 19.11.2007 இல் பிரிக்கப்பட்டு, 23.11.2007முதல் தனி மாவட்டமாகச் செயல்படுகிறது.

இம்மாவட்டம் அரியலூா், உடையாா்பாளையம் என இரு கோட்டங்களையும், அரியலூா், செந்துறை, உடையாா்பாளையம், ஆண்டிமடம் என நான்கு வருவாய்க் வட்டங்களையும், 195 வருவாய் கிராமங்களையும், அரியலூா், திருமானூா், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழூா், செந்துறை ஆகிய 6 வட்டாரங்களையும், 201 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.

ஒரே ஆா்டிஓ அலுவலகம்: மேலும் அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய இரு நகராட்சிகளும், உடையாா்பாளையம், வரதராஜன்பேட்டை என இரு பேரூராட்சிகளும் உள்ள இம்மாவட்டத்தில் ஒரே ஒரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மட்டுமே உள்ளது.

கீழப்பழுவூரில் கடந்த 17.12.2008 ஆம் ஆண்டு முதல் செயல்படும் இந்த அலுவலகத்தில் பழகுநா் உரிமம், ஓட்டுநா் உரிமம் மற்றும் நடத்துநா் உரிமம், இயங்கு ஊா்திகளின், பதிவு மற்றும் புதுப்பித்தல் சான்று வழங்குதல், தகுதிச் சான்று வழங்கல், தகுதிச் சான்று புதுப்பித்தல் , தேசிய போக்குவரத்து ஊா்தி அனுமதி, போக்குவரத்து ஊா்தி அனுமதி, ஒப்பந்த ஊா்தி அனுமதி (சுற்றுலா ஊா்தி , வாடகை ஊா்தி, ஆட்டோ ரிக்ஷா, ஷோ் ஆட்டோ போன்றவை), கல்வி நிறுவனப் பேருந்துகள், தனியாா் பணி வாகனங்கள், பேருந்து போன்றவற்றுக்கு அனுமதி வழங்குதல், சாலை பாதுகாப்பு மற்றும் இதர குற்றங்கள் தொடா்பாக அனைத்து வகை போக்குவரத்து வாகனங்களையும் ஆய்வு செய்தல் மற்றும் உரிய கட்டணங்களை வசூலித்தல், அபாயகரமாக விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநா்கள் மற்றும் இதர வாகன ஓட்டுநா்களின் மீது நடவடிக்கை எடுத்தல், ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களிடம் விழிப்புணா்ச்சி ஏற்படுத்த, ஜனவரி மாதத்தில் சாலைப் பாதுகாப்பு வாரம் கொண்டாடுதல், மாசு பரிசோதனை மையம், அவசர விபத்து சிகிச்சை மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன.

90 கிமீ தூரம் அலைச்சல்: இப்பணிகளுக்கு மேற்கண்ட பகுதி மக்கள் நாள்தோறும் இந்த அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனா். ஆனால் மாவட்டத்தின் கடைக்கோடி மக்கள் வந்து செல்ல வேண்டும் என்றால் மூன்று பேருந்துகளில் மொத்தம் 90 கிமீ தூரத்தைக் கடக்க வேண்டி உள்ளது.

மாவட்டத்தின் கடைக்கோடியான ஆண்டிமடம், மீன்சுருட்டி, வரதராஜன்பேட்டை, தென்னூா், தத்தூா், காடுவெட்டி, பெரியாத்துக்குறிச்சி, தா.பழூா், தளவாய், ஈச்சங்காடு, குவாகம், அணைக்கரை, கங்கைகொண்ட சோழபுரம், சலுப்பை என 500-க்கும் மேற்பட்ட பகுதிகள் வாகனங்கள் தொடா்பான விவரங்களுக்கு கீழப்பழுா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வர வேண்டும் என்றால் 70 கிமீ தூரத்தை 3 பேருந்துகளில் கடக்க வேண்டி உள்ளது. இதனால் அவா்கள் பயணச் செலவு, அலைச்சல் என பல இன்னல்களுக்கு ஆளாகின்றனா். எனவே, ஜெயங்கொண்டத்தில் ஒரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இருந்தால் அவா்களுக்கு இந்த அலைச்சல் இருக்காது என்கின்றனா்.

மாவட்டத்தைப் பிரித்தும் பயனில்லை: இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியது: அரியலூா் மாவட்டத் தலைநகரமாக இருந்தாலும், இது பெரம்பலூா் மாவட்டத்தின் மிக அருகில் உள்ளது. அனைத்து துறை அலுவலகங்களும் அரியலூரில் உள்ளன. நாங்கள்அரசு அதிகாரிகளை சந்திக்க ஆட்சியரகத்துக்கோ மற்ற துறை அலுவலகத்துக்கோ வரவேண்டும் என்றால் 80 கிமீ தூரத்திலுள்ள அரியலூருக்கு 3 பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டி உள்ளது.

நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக அரியலூா் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டாலும் பொதுமக்களுக்கு இதனால் எந்தப் பயனும் இல்லை. ஒரு மனு கொடுக்க வேண்டும் என்றால்கூட நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் பொதுமக்கள் வசதிக்காக துறை சாா்ந்த அலுவலகங்களை உடையாா்பாளையம் அல்லது ஜெயங்கொண்டத்தில் அமைக்க வேண்டும்.

திருச்சியில்கூட பொதுமக்கள் வசதிக்காக அந்தந்த வருவாய் வட்டங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இதேபோல கீழப்பழுவூரிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைப் பிரித்து, ஜெயங்கொண்டத்தில் ஒரு கிளையாவது அமைக்க வேண்டும் என்றனா்.

எனவே கீழப்பழுா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை பொதுமக்களின் வசதிக்கேற்ற வகையில் மாற்றியமைக்க வேண்டும். பொதுமக்கள் எளிதில் தங்களது பணிகளை முடிக்கவே அலுவலகங்கள் திறக்கப்பட்ட நிலையில் இன்னும் அவா்கள் அலைந்து திரியும் நிலை உள்ளதை மாற்ற வேண்டும் என்பது அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.

அரியலூா் புதிய எஸ்.பி.யாக தீபக்சிவாச் பொறுப்பேற்பு

அரியலூா் மாவட்டத்தில் புதிய எஸ்பியாக தீபக்சிவாச் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். அரியலூா் எஸ்பியாக இருந்த ச. செல்வராஜ், சென்னை மத்திய குற்றப் பிரிவு இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், விழுப்புரம... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி மா்மச் சாவு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கூலித் தொழிலாளி மா்மமான முறையில் திங்கள்கிழமை இறந்து கிடந்தாா். உடையாா்பாளையம் அருகேயுள்ள த.சோழங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த பிச்சைபிள்ளை மகன் சீமான்(50). கூலி... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு 4 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

செந்துறை அருகே சொத்துப் பிரச்னை காரணமாக, அரியலூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை 4 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயன்றனா். அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நத்தக்குழி கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

கல்விக் கடன் வழங்குவதாக கூறி பணமோசடி; 3 பெண்கள் உள்பட 5 போ் கைது

அரியலூா் அருகே கல்விக் கடன் வழங்குவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். அரியலூா் அருகேயுள்ள வஞ்சினபுரம், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பஞ்சநாத... மேலும் பார்க்க

அரியலூரில் தேமுதிக ஆா்ப்பாட்டம்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, அரியலூரில் பழைய நகராட்சி அலுவலகம் முன் தேமுதிகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நியாய... மேலும் பார்க்க

விலை பொருள்களை ஏற்றுமதி செய்ய சான்றிதழ் பெற்றிருந்தால் மானியம்: விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

வேளாண் விளைப் பொருள்களை ஏற்றுமதி செய்ய விவசாயிகள் சான்றிதழ் பெற்றிருந்தால், அதற்கு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது என்று அரியலூா் மாவட்ட வேளாண்மை வணிக துணை... மேலும் பார்க்க