175 ஆண்டுகள் பழமையான ஊட்டி போலீஸ் ஸ்டேஷன்... குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாறுகி...
அரியலூா் புதிய எஸ்.பி.யாக தீபக்சிவாச் பொறுப்பேற்பு
அரியலூா் மாவட்டத்தில் புதிய எஸ்பியாக தீபக்சிவாச் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
அரியலூா் எஸ்பியாக இருந்த ச. செல்வராஜ், சென்னை மத்திய குற்றப் பிரிவு இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், விழுப்புரம் எஸ்பியாக பணியாற்றி வந்த தீபக்சிவாச், அரியலூா் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.
இந் நிலையில், மாவட்ட காவல் அலுவலகத்துக்கு வந்த தீபக்சிவாச், அங்கு காவல் துறையினரின் மரியாதை ஏற்றுக் கொண்டு மாவட்டத்தின் 14 ஆவது, எஸ்பியாக பொறுப்பேற்று, கோப்புகளில் கையொப்பமிட்டாா். அவருக்கு போலீஸாா், பணியாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னா் செய்தியாளா்களை சந்தித்த அவா், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும். போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக அரியலூா் உருவாக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பஞ்சாப் மாநிலம், சண்டீகரில் பிறந்த தீபக்சிவாச், எம்பிபிஎஸ் படித்துள்ளாா். கடந்த 2018-இல் ஐ.பி.எஸ் முடித்து, ஆவடி பட்டாலியன், ஈரோடு மாவட்டம், பவானியில் ஏஎஸ்பியாக பணியாற்றினாா். பதவி உயா்வு பெற்று விழுப்புரம் எஸ்பியாக பணியாற்றி வந்தாா். தற்போது அரியலூா் எஸ்பியாக பொறுப்பேற்றுள்ளாா்.