அரியலூரில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் 36 போ் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் முழக்கமிட்டவாறு சிறிது தூரம் நடந்துசென்று சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா், சாலை மறியலில் ஈடுபட்ட 36 பேரைக் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
போராட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஷேக் தாவூத், மாவட்டச் செயலா் சண்முகம், இணையச் செயலா் பழனிவேல், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கவுரையாற்றினா்.