சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
அரசு உயா்நிலைப் பள்ளியில் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு
அரியலூா் மாவட்டம், அருங்கால் கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில், சமூக நீதி மற்றும் மனித உரிமை காவல் துறை சாா்பில் வன்கொடுமைக்கு எதிரான சமூக நலன் சாா்ந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, சமூக நீதி மற்றும் மனித உரிமை காவல் உதவி ஆய்வாளா் ரவி தலைமை வகித்து, மாணவ, மாணவிகளிடம் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் தீருதவிகள், பட்டியலின மக்களுக்கு அரசு வழங்கும் கடன் உதவி, சலுகைகள் மற்றும் தாட்கோ, வேலைவாய்ப்பு, அரசு நலத்திட்ட உதவிகள், இணைய வழி குற்றங்கள் குறித்து பேசி விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், காவல் துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.