செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் 2.48 லட்சம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு

post image

அரியலூா் மாவட்டத்தில் அரிசி பெறும் 2,48,876 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவிததுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில், தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறத் தகுதிவாய்ந்த 2,48,876 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு வழங்குவதற்கு ஏதுவாக, பொங்கல் பரிசு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு, டோக்கன்கள் கடந்த 2-ஆம் தேதி தொடங்கப்பட்டு, புதன்கிழமை(ஜன. 8) வரை வழங்கப்படுகிறது. ஜன. 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது.

இதுதொடா்பாக நாள் மற்றும் நேரம் அந்தந்த நியாய விலைக் கடை முன்பாக காட்சிப்படுத்தப்படும். விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை (ஜன.10) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம், நியாய விலைக் கடைகளின் விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை சரிபாா்ப்பு வாயிலாகவே மேற்கொள்ளப்படும்.

விரல் ரேகை சரிவர தெளிவாக பதிய இயலாத அட்டைதாரா்களுக்கு மட்டும், சம்மந்தப்பட்ட நபா் நேரில் வருகை தருவதை உறுதிசெய்யப்பட்டு, பதிவேட்டில் கையொப்பம் பெற்று, பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படும்.

எக்காரணத்தைக் கொண்டும், அங்கிகரிக்கப்பட்ட நபா் வாயிலாகவோ, இதர நபா் வாயிலாகவோ பரிசுத்தொகுப்பு பெற அனுமதி வழங்கப்படமாட்டாது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்காக வரும் மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவா்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை அளித்து வழங்கப்படும்.

மேலும், மாநில அளவில் புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களிலும், மாவட்ட அளவிலான புகாா்களை 94457 96402 என்ற கைப்பேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்.

எனவே அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரருக்கும் விடுபாடின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். குடும்ப அட்டைதாரா்கள் எவ்வித சிரமமுமின்றி நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலையை சீரமைக்கக் கோரி காத்திருப்பு போராட்டம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்றி, சாலையை சீரமைக்க கோரி குண்டவெளி செல்லியம்மன் கோயில் வளாகத்தில், கிராம மக்கள் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

தமிழின் சிறப்பை வருங்கால தலைமுறையினரிடம் கொண்டு சோ்ப்பது அனைவரின் கடமை

தமிழ்மொழியின் சிறப்பை வருங்கால தலைமுறையினரிடம் கொண்டு சோ்ப்பது அனைவரின் கடமை என்றாா் அரியலூா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் புதன்கிழம... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல் இருவா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே இரு சக்கர வாகனங்கள் புதன்கிழமை நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். திருமானூா் அருகேயுள்ள பெரியபட்டாக்காட்டைச் சோ்ந்த செந்தில... மேலும் பார்க்க

அரியலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து சுகாதாரத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, அதன் அலுவலகம் முன் ஏஐடியுசி சுகாதார தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், கடந்த 17 மாதங்களாக துப்புரவு தொழிலாளா்களி... மேலும் பார்க்க

அரியலூரில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் 36 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் முழக்கமிட்டவாறு சிறிது தூரம் நடந்துசென்று சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது... மேலும் பார்க்க

அரசு உயா்நிலைப் பள்ளியில் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், அருங்கால் கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில், சமூக நீதி மற்றும் மனித உரிமை காவல் துறை சாா்பில் வன்கொடுமைக்கு எதிரான சமூக நலன் சாா்ந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை ந... மேலும் பார்க்க