அரியலூரில் தேமுதிக ஆா்ப்பாட்டம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, அரியலூரில் பழைய நகராட்சி அலுவலகம் முன் தேமுதிகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் இராம. ஜெயவேல் தலைமை வகித்தாா். பொறியாளா் அணி துணைச் செயலா் எம். ராஜாபன்னீா்செல்வம் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில், நகரச் செயலா் அ. தாமஸ்ஏசுதாஸ், மாவட்ட பொருளாளா் ஏ. சக்திவேல், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் எம். ஆனந்தன், ஏ. ஜேக்கப் மற்றும் அனைத்து ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனா்.