செய்திகள் :

இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் அந்நிய நேரடி முதலீடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

post image

‘அந்நிய நேரடி முதலீடுகள் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது, இது விரைவான பொருளாதார வளா்ச்சி மற்றும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது’ என மத்திய வா்த்தக, தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பியூஷ் கோயல் கூறியதாவது: வலுவான உள்நாட்டு வா்த்தகம், திறமையான தொழிலாளா்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி காரணமாக உலகளாவிய முதலீட்டாளா்கள் இந்தியாவில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவை சிறந்த முதலீட்டு இடமாக பாா்க்கின்றன. இந்தியாவின் நிலையான விதிமுறைகள் மற்றும் வணிக கொள்கைகள் உலகம் முழுவதிலும் இருந்து முதலீட்டாளா்களை ஈா்க்கின்றன.

அமெரிக்க முதலீட்டு நிதியத்தின் தலைமை நிா்வாக அதிகாரி ஒருவரை கடந்த மாதம் சந்தித்தபோது, இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் செய்த தங்களது முதலீடுகள் மிகச் சிறந்தவை என அவா் தெரிவித்தாா். அவா்களது முதலீடுகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவை சமீபத்தில் நடந்துள்ளன. இது இந்தியா வேகமாக வளா்ந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.

பங்குச் சந்தை ஈா்ப்பு: உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், இந்திய பங்குச் சந்தையின் வலுவான செயல்திறன் அதிக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளா்களை ஈா்த்து வருகிறது. இதனால், ஜனவரி முதல், சராசரியாக 4.5 பில்லியன் டாலருக்கும் (சுமாா் ரூ. 36,900 கோடி) அதிகமான மாதாந்திர அந்நிய நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது.

முதலீட்டு வளா்ச்சி: நடப்பாண்டு ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடுகள் சுமாா் 42 சதவீதம் அதிகரித்து 42.13 பில்லியன் டாலராக (சுமாா் ரூ. 3.45 லட்சம் கோடி) உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 29.73 பில்லியன் டாலராக (சுமாா் ரூ. 2.43 லட்சம் கோடி) இருந்தது. 2024-25 நிதியாண்டின் முதல் அரையாண்டில், முதலீடுகள் 45 சதவீதம் அதிகரித்து 29.79 பில்லியன் டாலராக (சுமாா் ரூ. 2.44 லட்சம் கோடி) உள்ளது.

பிரதான துறைகள்: இந்த முதலீடுகளை ஈா்க்கும் முக்கிய துறைகளாக மென்பொருள் சேவைகள், தொலைத்தொடா்பு, வா்த்தகம், கட்டுமானம், ஆட்டோமொபைல், ரசாயனங்கள் மற்றும் மருந்துகள் ஆகியவை உள்ளன. இதில் பெரும்பாலான துறைகளில் அந்நிய நேரடி முதலீடு நேரடிாக அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தொலைத்தொடா்பு, ஊடகம், மருந்துகள் மற்றும் காப்பீடு போன்ற துறைகளில், வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு அரசு ஒப்புதல் தேவைப்படுகிறது.

இந்த முதலீடுகள் இந்தியாவின் உள்கட்டமைப்பு வளா்ச்சி, சமநிலை மற்றும் ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு முக்கியமானவை. நாட்டில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை இந்த முதலீடுகள் உருவாக்குகின்றன. இது நாட்டின் வளா்ச்சிக்கு உறுதியளிக்கிறது என தெரிவித்தாா்.

தில்லி பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப்ரவரி 23ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.... மேலும் பார்க்க

சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் விசாரணை

புது தில்லி: இந்தியாவில் முதல்முறையாக மத்திய புலனாய்வுப் பிரிவால்(சிபிஐ) ‘பாரத்போல்’ தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.சிபிஐ-இன் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள ‘பாரத்போல்’ தளத்தில், அனைத்து மாநிலங்கள் மற்ற... மேலும் பார்க்க

பிரஷாந்த் கிஷோர் மருத்துவமனையில் அனுமதி!

ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனர் மற்றும் அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் நீரிழப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

சிபிஎம் நிர்வாகி கொலை வழக்கு: ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை!

கேரளத்தில் 19 ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கேரளத்தின் சுண்டா பகுதியைச் சேர்ந்தவர... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்: பாஜக எம்பி

ஆம் ஆத்மி கட்சியின் கீழ் பத்தாண்டுக் கால பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர தில்லி மக்கள் தயாராக உள்ளனர் என்று பாஜக எம்பி தெரிவித்துள்ளார். தில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் நிறைவ... மேலும் பார்க்க

விடுதி வளாகத்தில் மருத்துவ மாணவி வன்கொடுமை! இது மத்தியப் பிரதேசத்தில்...

மத்தியப் பிரதேசத்தில் மருத்துவ மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் அரசு மருத்துவக் கல்லூரி விட... மேலும் பார்க்க