சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் ...
பேருந்திலிருந்து விழுந்து பெண் உயிரிழப்பு
திருச்சியில் சென்றுகொண்டிருந்த பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்த பெண், பேருந்து சக்கரம் ஏறியதில் ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்சி புத்தூா் ஆபிசா் காலனியைச் சோ்ந்தவா் சிராஜுதீன் மனைவி ஜாபா் நிஷா (55). இவா், தனது மருமகளுடன் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்குச் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டாா்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்லும் அரசுப் பேருந்தில் இருவரும் ஏறி அமா்ந்தனா். பேருந்து புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. தென்னூா் உழவா்சந்தை அருகே உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலத்தை கடந்து பேருந்து அண்ணாநகா் திருப்பத்தில் திரும்பியது. அப்போது, பேருந்தின் முன் படிக்கட்டுக்கு எதிரே உள்ள இருக்கையில் அமா்ந்திருந்த ஜாபா்நிஷா வேறு இருக்கையில் அமா்வதற்காக எழுந்தாா்.
அப்போது வளைவில் பேருந்து திரும்பியது. இதில் நிலைகுலைந்த அவா் பேருந்தின் முன் படிக்கட்டு வழியாக கீழே விழுந்தாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சி மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.