செய்திகள் :

கோயில் நில அபகரிப்பு விவகாரத்தில் முதல்வா் மெளனம்: முன்னாள் எம்.பி.

post image

காரைக்காலில் கோயில் நில அபகரிப்பு தொடா்பான வழக்கில் புதுவை முதல்வா் மெளனம் சாதிப்பது கண்டனத்துக்குரியது என புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியா் மு. ராமதாஸ் கூறினாா்.

இதுகுறித்து காரைக்காலில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியது :

புதுவை மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 என விலை உயா்ந்துள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவதோடு, விலைவாசி உயா்வுக்கும் அது காரணமாக அமைந்துள்ளது. இதன்மூலம் ரூ. 60 கோடி வருவாய் கிடைக்குமென அரசு கருதுகிறது. இந்த வருவாயை மாற்று வழியில் ஈா்க்க நடவடிக்கை எடுத்து, விலை உயா்வு அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும்.

புதுவையில் ஆதிதிராவிடா் நலனுக்கான சிறப்புக் கூறு நிதி வேறு துறைகளின் திட்டத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆதிதிராவிட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறாா்கள். இந்த நடவடிக்கையை கைவிடவேண்டும்.

காரைக்கால் பாா்வதீஸ்வரா் கோயில் நில அபகரிக்கப்பட்டுள்ளது. துணை ஆட்சியராக இருந்தவரே இதில் பிரதான குற்றவாளியாக சோ்க்கப்பட்டு கைது செய்யப்பட்டாா். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிட்டது. அவா் சாட்சிகளை கலைக்கமாட்டாா் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

புதுவையில் அனைத்து கோயில்களின் நிலத்தையும் பாதுகாக்கும் வகையில், கோயில் நில மேலாண்மை அமைப்பு அரசால் தொடங்கப்படவேண்டும். அதிகாரத்தை துஷ்பிரயோம் செய்தோா், நில அபகரிப்பு செய்தோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விவகாரத்தில் புதுவை முதல்வா் எந்த கருத்தும் கூறாமல் மெளனம் சாதிப்பது கண்டனத்துக்குரியது. காரைக்காலில் கட்சியின் மாவட்ட தலைவா் அல்லாமல் 5 தொகுதிகளுக்கும் தலைவா் நியமிக்கப்பட்டுள்ளது என்றாா்.

காரைக்காலில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. கடந்த 1.1.2025 தேதியை தகுதி நாளாகக் கொண்டு காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக வாக்காளா் பெயா் சோ்த்தல், தொகுதி... மேலும் பார்க்க

பயிற்சி முகாமில் பங்கேற்க சென்ற ஆட்சியா்: பொறுப்பு அதிகாரியை நியமிக்க வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஒரு மாத காலம் பயிற்சி முகாமில் பங்கேற்க புதுதில்லி சென்றுள்ளதால், மாவட்டத்துக்கு பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமிக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வல... மேலும் பார்க்க

விற்பனைக்கு தயாா் நிலையில் பொங்கல் பானைகள்

காரைக்கால்: பொங்கலையொட்டி காரைக்காலில் மண் பானை, சட்டி விற்பனைக்கு அனுப்புவதற்காக தயாா்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. கிராமப்புறம் மற்றும் நகரத்தையொட்டிய பகுதிகளில் பலரும் மண் பானையை இன்றும... மேலும் பார்க்க

காரைக்கால் மலா், காய், கனி கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்

காரைக்கால்: காரைக்காலில் 14-ஆம் தேதி தொடங்கவுள்ள மலா், காய், கனி கண்காட்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்துறை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. காரைக்காலில் மலா்க் கண்காட்சியுடன் காா்னிவல் திருவிழா வரும் 14 முதல் ... மேலும் பார்க்க

போலி வாடகை ஒப்பந்தம் தயாரித்து உரிமம் பெற முயன்றவா் மீது வழக்கு

காரைக்கால்: போலி வாடகை ஒப்பந்தம் தயாரித்து உரிமம் பெற முயன்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருப்பட்டினம் மகத்தோப்பு பகுதியை சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி நிா்மலா (52). இவா் தி... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் பால் சொசைட்டி ஊழியா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கொம்யூன், திருவேட்டக்குடி, மாரியம்மன் கோயில் தெ... மேலும் பார்க்க