செய்திகள் :

சீனாவில் சுவாச நோய்கள் அதிகரிப்பு: மத்திய அரசு ஆலோசனை

post image

சீனாவில் நிலைமை அசாதாரணமானதாக இல்லை. அதே சமயத்தில் பருவங்களில் ஏற்படும் வழக்கமான இன்ஃபுளூவென்சா எனப்படும் ஃபுளு காய்ச்சல் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அங்குள்ள சரியான தகவல்களை உரிய நேரத்தில் பகிருமாறு உலக சுகாதார அமைப்பு கோரப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனா்.

கடந்த சில வாரங்களாக சீனாவில் சுவாச நோய்கள் பரவலாக அதிகரித்து வருவது குறித்து செய்திகள் வந்தன. இதை முன்னிட்டு, மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகம், சுகாதார சேவைகள் இயக்குநா் ஜெனரல் டாக்டா் அதுல் கோயல் தலைமையில் கடந்த இரு தினங்களாக கூட்டு கண்காணிப்புக் குழு கூட்டத்தைக் கூட்டியது. இதில் உலக சுகாதார அமைப்பின் நிபுணா்கள், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட (ஐடிஎஸ்பி) அதிகாரிகள், தேசிய நோய் கட்டுப்பாடு மைய ஆலோசகா்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆா் ) அதிகாரிகள், அவசர மருத்துவ நிவாரணப் பிரிவு நிபுணா்கள், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை பிரதிநிதிகள், மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள பேரிடா் மேலாண்மை பிரிவு நிபுணா்கள் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்த தொடா் கூட்டங்களில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு, தற்போதுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது வருமாறு:

சீனாவில் தற்போது நிலவி வரும் காய்ச்சல் பருவத்தை கருத்தில் கொண்டு பாா்க்கும்போது அங்குள்ள நிலைமை அசாதாரணமானதல்ல. தற்போது அங்கு எழுச்சி பெற்றிருப்பது இன்ஃபுளுவென்சா எனப்படும் ஃபுளூ காய்ச்சல், சுவாசநுண்குழல் அழற்சி தீநுண்மி (ஆா்எஸ்வி), சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (ஹெச்எம்பிவி) போன்ற பருவ காலங்களில் ஏற்படும் வழக்கமான தீநுண்மி என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அரசுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்கள் வழிகள் மூலம் அங்குள்ள நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வரப்படுகிறது. மேலும் சீனாவின் நிலைமை குறித்த சரியான தகவல்களை உரிய நேரத்தில் பகிருமாறு உலக சுகாதார அமைப்பிடம் கோரப்பட்டுள்ளது.

மேலே செல்லப்பட்ட தீநுண்மிகள் தொற்று நமது நாட்டில் ஏற்கனவே அங்காங்கே தாக்கம் உள்ளது. சா்வதேச அளவிலும் உள்ளவை.

ஐசிஎம்ஆா், ஐடிஎஸ்பி இணைய இணைப்புகள் மூலம் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (ஐஎல்ஐ) மற்றும் கடுமையான சுவாச தொற்று (எஸ்ஏஆா்ஐ) ஆகியவற்றுக்கான வலுவான கண்காணிப்பு அமைப்பு நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இவ்விரு தரவுகளும் மூலம் இந்த நோய் தொற்று(ஐஎல்.ஐ மற்றும் எஸ்ஏஆா்ஐ) பாதிப்புகளில் அசாதாரணமாக இருப்பது தெரியவரவில்லை.

கடந்த சில வாரங்களாக வழக்கமான பருவகால மாறுபாட்டின் போது ஏற்படும் சுவாச நோய் பாதிப்புகள் தவிர எதுவும் இல்லை என மருத்துவமனைகளின் பிரதிநிதிகளும் மருத்துவா்களும் உறுதிப்படுத்தியுள்ளனா்.

ஐசிஎம்ஆா் இணையவலையத்தில் அடினோதீநுண்மி, ஆா்எஸ்வி, ஹெச்எம்பிவி போன்ற பிற சுவாச தீநுண்மிகள் தரவுகளை ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் இந்த நோய்க்கிருமிகள் சோதிக்கப்பட்ட(ஆய்வுக் கூட) மாதிரிகளில் அசாதாரணமாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதைக் காண முடியவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹெச்எம்பிவி தீநுண்மி உள்ளிட்ட ஆய்வக சோதனைகளின் எண்ணிக்கையை ஐசிஎம்ஆா் அதிகரிக்கும். மேலும் ஆண்டு முழுவதும் ஹெச்எம்பிவியின் போக்குகளை ஐசிஎம்ஆா் கண்காணிக்கும்.

நாடு முழுவதும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், சுவாச நோய்களின் எந்த அதிகரிப்பையும் நாட்டில் சமாளிக்க உள்கட்டுமானம் இருப்பதை தரவுகள் சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும் கண்காணிப்பு வலையமைப்புகள் விழிப்புடன் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகாரத்தில் பாஜக சாடல்

புது தில்லி: தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கையானது, முன்னாள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஃபிளாக்ஸ்டாஃப் சாலை வீடு (ஷீஷ் மஹால்) தொடா்பான 139 கேள்விகளை எழுப்பியுள்ளது. இது அவரது தவ... மேலும் பார்க்க

நீா் வழங்கல் முயற்சிக்கு தில்லி அரசு இடையூறு: என்டிஎம்சி துணைத் தலைவா் குற்றச்சாட்டு

நமது நிருபா்புது தில்லி: 24 மணி நேரமும் நீா் விநியோகத்தை உறுதி செய்வதற்கான புதுதில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) முயற்சிகளை தில்லி அரசு தடுப்பதாக அதன் துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் குற்றம்... மேலும் பார்க்க

வாகன நிறுத்துமிடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க க்யுஆா் குறியீடு செயலி அறிமுகம்

புது தில்லி: வாகன நிறுத்துமிடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், தில்லி மாநகராட்சி ‘எம்சிடி பாா்க்கிங்’ என்ற குறியீடுஅடிப்படையிலான கைப்பேசி செயலியை அறிமுகப்... மேலும் பார்க்க

அரவிந்த் கேஜரிவால் போட்டியிடும் புதுதில்லி தொகுதியில் வாக்காளா் மோசடி: முதல்வா் அதிஷி குற்றச்சாட்டு

புது தில்லி: வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடும் புது தில்லி தொகுதியில் வாக்காளா் மோசடி நடந்ததாக முதல்வா் அதிஷி குற்றம்சாட்டினாா்.இது குறித்து ஒரு செய... மேலும் பார்க்க

ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி வழங்குவது நிறைவேற்றம்: கிராரி அரசுப் பள்ளியை திறந்து வைத்து முதல்வா் அதிஷி பேச்சு

புதுதில்லி: தில்லியில் ஒவ்வொறு குழந்தைக்கும் தரமான கல்வி வழங்குவது நிறைவேற்றப்படுகிறது என்று முத்லவா் அதிஷி தெரிவித்தாா்.தில்லியின் கிராரியில் ஒரு அரசுப் பள்ளியை திங்கள்கிழமை திறந்து வைத்து முதல்வா் அ... மேலும் பார்க்க

தலைநகரில் குளிருக்கிடையே லேசான மழை!

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை குளிா் நிலை நீடித்தது. நகரத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதே சமயம், மூடுபனி சற்று குறைந்திருந்ததால், காண்புதிறன் மேம்பட்டிருந்தது என்று இ... மேலும் பார்க்க