2024ல் கியா இந்தியா விற்பனை 6% அதிகரிப்பு!
புதுதில்லி: தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, கியா இந்தியா, 2024ஆம் ஆண்டில், அதன் மொத்த விற்பனை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 6 சதவிகிதம் உயர்ந்து 2,55,038 யூனிட்டுகளாக உள்ளது.
கியா இந்தியா நிறுவனமானது 2023-ல் 2,40,919 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஏற்றம் கண்ட ஆட்டோ துறை பங்குகள்!
கியா இந்தியாவின் மூத்த துணைத் தலைவரும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவருமான ஹர்தீப் சிங் பிரார் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது:
2024ஆம் ஆண்டு கியா இந்தியாவுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட காலமாகும். வாடிக்கையாளர்களுக்கு பிடித்த கியா மாடல்களை தக்க சமயத்தில் டெலிவரி வழங்கியதால் எங்கள் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளத்தையும் நாங்கள் வலுப்படுத்த முடிந்தது.
2025 க்குள் நுழையும் போது, இந்திய வாகன நிலப்பரப்பை மறுவரையறை செய்வதாக உறுதியளிக்கும் வகையில் எங்கள் சைரோஸ் மாடல் இருக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இதன் மூலம், நாங்கள் புதிய தொழில்துறை வரையறைகளை அமைத்து வாகன சந்தையில் எங்கள் தலைமை நிலையை வலுப்படுத்துவோம்.