Pongal Special Train: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் சிறப்பு ரயில்கள்; முழு விவரம்
பொங்கல் பண்டிகை கால தொடர் விடுமுறையில் சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிரமில்லாமல் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கும் வகையில் கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, ராமநாதபுரம் போன்ற நகரங்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி தாம்பரம்-கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06093) ஜனவரி 13 அன்று தாம்பரத்திலிருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.30 மணிக்குக் கன்னியாகுமரி சென்று சேரும். மறு மார்க்கத்தில், கன்னியாகுமரி-தாம்பரம் சிறப்பு ரயில் (06094) ஜனவரி 14 அன்று கன்னியாகுமரியிலிருந்து மாலை 03.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 06.15 மணிக்குத் தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
குளிர்சாதன இரண்டடுக்குப் படுக்கை வசதி பெட்டிகள் - 2, குளிர்சாதன மூன்றடுக்குப் படுக்கை வசதி பெட்டிகள் - 4, குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்குப் படுக்கை வசதி பெட்டிகள் - 2, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் -10, மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டி ஒன்று, மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
நாகர்கோவில் சிறப்பு ரயில் (06089) ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய நாட்களில் சென்னை சென்ட்ரலிலிருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 01.00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06090) ஜனவரி 13 மற்றும் 20 ஆகிய நாட்களில் நாகர்கோவிலிலிருந்து இரவு 07.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 09.30 மணிக்குச் சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இந்த ரயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் குளிர்சாதன இரண்டடுக்குப் படுக்கை வசதி பெட்டிகள் -2, குளிர்சாதன மூன்றடுக்குப் படுக்கை வசதி பெட்டிகள் -6, குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்குப் படுக்கை வசதி பெட்டிகள் -4, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் -6, இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் -2, மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டி ஒன்று மற்றும் சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06091) ஜனவரி 13, 20 மற்றும் 27 ஆகிய நாட்களில் தாம்பரத்திலிருந்து மாலை 03.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை மதியம் 04.55 மணிக்குத் திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் சிறப்பு ரயில் (06092) ஜனவரி 12, 19 மற்றும் 26 ஆகிய நாட்களில் திருநெல்வேலியிலிருந்து மாலை 03.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04.10 மணிக்குத் தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழ கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்குப் படுக்கை வசதி பெட்டிகள், குளிர்சாதன மூன்றடுக்குப் படுக்கை வசதி பெட்டிகள் -2, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் -10, இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் -3, மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.
ராமநாதபுரம் - தாம்பரம் சிறப்பு ரயில் (06104) ஜனவரி 10, 12 மற்றும் 17 ஆகிய நாட்களில் ராமநாதபுரத்திலிருந்து மாலை 03.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.30 மணிக்குத் தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் சிறப்பு ரயில் (06103) ஜனவரி 11, 13 மற்றும் 18 ஆகிய நாட்களில் தாம்பரத்திலிருந்து மாலை 05.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை மதியம் 05.15 மணிக்கு ராமநாதபுரம் சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் குளிர்சாதன மூன்றடுக்குப் படுக்கை வசதி பெட்டிகள் -10, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் -7, மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டி, சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...