செய்திகள் :

திருப்பத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்து; சுட்டிக்காட்டிய விகடன்- நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் அருகே, நான்குவழிச் சாலை அமைத்துக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நெடுஞ்சாலையை (179A) ஆம்பூர், வேலூர், சென்னை செல்ல வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வரும் நிலையில், விபத்துகள் தொடர்ந்து நேர்ந்து வருகிறது. முக்கியமாக வாகனங்கள் செல்லும் இடத்தில் இரண்டு பக்கமும் ரெட்டியூர், சின்னகம்மியம்பட்டு, குன்டிமாரியம்மன் வட்டம், காந்தி நகர் போன்ற வெவ்வேறு ஊர்கள் அமைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் வாகன ஓட்டிகளைத் தாண்டி பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் காணப்படும். காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள், வெளியூருக்கு வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் அனைவரும் இங்கு நின்றுதான் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இது பற்றி அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரித்தபோது, `நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் மிகவும் வேகமாக வருகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையைக் கடக்காமல் பல முறை திக்குமுக்காடுகின்றோம்.

இதனால் பல முறை விபத்துகள் நேர்ந்து வருகிறது. அண்மையில் கூட ஸ்கூட்டியில் பெண் ஒருவர் சாலையைக் கடக்கும்போது நான்கு சக்கர வாகனம் இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இது போன்று இங்கு இரண்டு வருடங்களில் பல அசம்பாவிதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்விடத்தில் ஒரு பேரிகார்டு இருந்திருந்தால் இது போன்று நடந்திருக்காது' என்று வேதனையுடன் கூறினர்.

இந்த விவகாரம் தொடர்பாக விகடன் ``தளத்தில் திருப்பத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள் - நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?" என்ற‌ தலைப்பில் செய்தி ஒன்றினை ஜனவரி 2-ம் தேதி வெளியிட்டிருந்தோம்.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, விகடனில் செய்தி வெளிவந்த மூன்று நாள்களில் (05/01/2025) அன்று அதிகாரிகள் விபத்து சூழலை கருத்தில் கொண்டு விரைந்து பேரிகார்டுகள் அமைத்துள்ளார்கள். இனிமேல் எந்த அசம்பாவிதமும் நடக்க வாய்ப்பில்லை என்று அப்பகுதி மக்கள் இன்முகத்துடன் கூறினார்கள்.

உயிரோடிருப்பவருக்கு இறப்புச் சான்று - முறைகேடான பத்திரப்பதிவால் வெளிச்சத்துக்கு வந்த மோசடி!

காரியாபட்டி நாசர் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் இருளாயி. இவர் குடும்பத்தின் பூர்வீக நிலம் திருச்சுழி பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில், இருளாயி இறந்துவிட்டதாக போலியாக சான்று பெற்று, அவர்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: அமலானது தேர்தல் நடத்தை விதிகள்; தலைவர்களின் சிலைகள் மறைப்பு; மேயர் அலுவலகம் சீல்

கடந்த 2021-இல் நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பெரியாரின் கொள்ளுப் பேரனும், காங்கிரஸ் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவேரா காங்கிரஸ் கட்சி சார... மேலும் பார்க்க

ஈரோடு: இபிஎஸ் உறவினருக்குச் சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை; பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில் என். ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான பிரபல தனியார் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.ஈரோட்டைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்தக் கட்... மேலும் பார்க்க

திருநெல்வேலி: அண்ணாநகர் பூங்காவில் நீர் தேக்கம்; நோய்த்தொற்று அச்சத்தில் மக்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தின் அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா, அப்பகுதியின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது. பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள், இந்த பூங்காவில் மாலை நேரத்த... மேலும் பார்க்க

HMPV : ``யாரும் பதற்றப்பட வேண்டாம்; 3-5 நாள்களில் தானாக..." - அமைச்சர் மா.சுப்ரமணியன்

சீனாவில் பரவிவரும் Human Metapneumo வைரஸ் (HMPV) தொற்று, இந்தியாவில் ஐந்து பேருக்கு (கர்நாடகா 2, தமிழ்நாடு 2, குஜராத் 1) ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், இது புதிய வைரஸ் அல்ல என்றும், மக்கள் யாரும் அச்... மேலும் பார்க்க

`இனி அதிரடி' - திமுகவை போட்டுத்தாக்கும் சிபிஎம் புதிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் - பின்னனி என்ன?

தி.மு.க-வை விமர்சிப்பதில் அ.தி.மு.க-வை விஞ்சி நிற்கிறது சி.பி.எம். தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடைபெறுகிறதா என்ற கேள்வியை அக்கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் எழுப்பி கூட்டணிக்குள் வெடி வ... மேலும் பார்க்க