ஐஎஸ்ஐ முத்திரை குத்திய அமைதி..! யுவன் குறித்து விஷ்ணு வரதன்!
கட்சிக்காக சரத் பவாரும் அஜீத் பவாரும் இணைய வேண்டும்!
கட்சியின் எதிர்காலம் கருதி சரத் பவாரும் அஜீத் பவாரும் இணைய வேண்டு என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் புரஃபுல் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புரஃபுல் பட்டேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் மீது எங்களுக்கு (அஜீத் பவார் அணி) மிகுந்த மரியாதை உள்ளது. இது எதிர்காலத்திலும் தொடரும். கொள்கையால் வெவ்வேறு அரசியல் பாதையைத் தேர்வு செய்துள்ளோம். ஆனால், மூத்த பவார் (சரத் பவார்) மீதான மரியாதை குறைந்துவிடவில்லை.
எதிர்காலத்தில் இரு பவார்களும் இணைந்தால், அதில் எந்தத் தவறும் இல்லை. பவார் குடும்பத்தில் ஒருவனாக நானும் இதனை பரிந்துரைக்கிறேன். பவார் குடும்பம் மீண்டும் இணைய வேண்டும் என்பதே தனிப்பட்ட முறையில் என்னுடைய விருப்பமாகவும் உள்ளது. தில்லியில் மூத்த பவாரை அவரின் பிறந்தநாளின்போது சந்தித்தேன். அது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. இருதரப்பிலும் சுமூகமான உறவு தொடர வேண்டும். இது அவர்கள் இருவருக்கு மட்டுமல்லாது கட்சிக்கும் நல்லது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பவார் மற்றும் அஜீத் பவார் ஆகிய இருவருக்கும் நெருக்கமான சிலர் இருவரையும் இணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.