செய்திகள் :

காதலிக்க நேரமில்லை: ரிலீஸ் தேதி!

post image

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மெனன் நடிப்பில் உருவான திரைப்படம் "காதலிக்க நேரமில்லை".

ஜெயம் ரவி, நித்யா மெனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி.ஜே. பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முழுக்காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இது, டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்படத்தின் முதல் பாடலான ‘என்னை இழுக்குதடி’ பாடல் நவ.22இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

யூடியூப்பில் மட்டும் இந்தப் பாடல் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் படம் ஜன.14ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐ முத்திரை குத்திய அமைதி..! யுவன் குறித்து விஷ்ணு வரதன்!

நேசிப்பாயா இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் விஷ்ணு வரதன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரத... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.04.01.2025மேஷம்:இன்று ராசியாதிபதி செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் சாதகமான பலனை தருவா... மேலும் பார்க்க

ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வி

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரிஸ்பேன் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதியில் தோல்வி கண்டாா்.போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவா், அந்தச் சுற்ற... மேலும் பார்க்க

தமிழ்நாடு அபார வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி தனது 5-ஆவது ஆட்டத்தில் மிஸோரத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது. முதலில் மிஸோரம் 21.2 ஓவா்களில் 71 ரன்களுக்கே 10 விக்... மேலும் பார்க்க

வெளியானது ஜீவாவின் ‘அகத்தியா' பட டீசர்

ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அகத்தியா' படத்தின் டீசர் வெளியானது. பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் புதிய படம் அகத்தியா. இதில் ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். ய... மேலும் பார்க்க